பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதக்கிளர்ச்சியினால் இந்தியாவின் விடுதலைக்குத் தாமஸ் ம் ஏற்படுமென்று நினைக்க ஹேது இல்லை. i

தவிரவும், இந்த ‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி காலகதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் லபோதிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது இதில் உண்மையில்லை. உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடைய யோரில் மிகமிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் தேறியிருக்கிறார்கள்.

பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும், ஜில்லா போர்டு முனிசிபாலிடி, சட்டசபை முதலியவற்றில் கெளரவஸ்தானங்களயுைம் தாமே அடைய வேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள். திருஷ்டாந்தமாக பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பினருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த வகுப்புக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாளருக்குள்ளே ‘அல்லாதார் கிளர்ச்சியை பிராமர் பிரிவுக்குணமுடையோரென்றும் மற்ற வகுப்பினருடன் சேர்ந்து உண்டு மனம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களே யல்லாது தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியார்களுடனும் தாம் சேர்ந்துள்ள மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள்.

‘பிராமணரல்லாதார்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம் பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாது ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்த தாகாது. எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள். பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம் சமபந்தி போஜனம் செய்து கொள்ளாதா பல பிரிவுகள் இருக்கின்றன.

‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். என்வே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்றேன். உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்களில்லாமல் சமத்துவக் கொள்கை வெற்றியடைய வேண்டுமென்றால், அதற்கு ஸ்வராஜ்யஸ்தாபனமே சரியான உபாயம். ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்டசபைகளில் எல்லா ஜாதி மோதாவிகளும் கலந்திருப்பார்களாதலால் அந்தச்சபைகளின் மூலமாக இந்தியாவில்

144