பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அபிப்ராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும்.

வஜ்ரஸ் அசி உபரிஷத்து பின்வருமாறு, ஞானமற்றவர்களுக்குத் துஷ்ணமாகவும் ஞானவக்கண் உடையவருக்கு பூஷணமாகவும் விளங்குவதும் அஞ்ஞானத்தை உடைப்பதுமாகிய ‘வஜ்ரஸ் அசி’ என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன்.

‘பிரம்ம, கூத்திரிய, வைசிய சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே பிராமணன் பிரதானமானவன் என்று வேத வசனத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்பது பரிசோதிக்கத் தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். அங்ஙனம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத்தையா? பிறப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம குணத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணன் என்றால் அஃதன்று. முன் இறந்தனவும் இனி வருவனவும், இப்போதுள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத் தான் இருக்கிறது. ஆகையால் (அவனுடைய) ஜீவன் பிராமணனாக மாட்டாது. ஆயின் (அவனது) தேஹம் பிராமணனெனில் அதுவுமன்று. சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையதாகத் தானிருக்கிறது. மூப்பு, மரணம், இயல்புகள், இயல்பின்மைகள், இவையனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும் பிராமணன் வெள்ளை நிறமுடையவன், கூத்திரியன் செந்நிற முடையவன், வைசியன் மஞ்சள் நிற முடையவன், சூத்திரன் கருமை நிற முடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயினும் தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்கு பிரமஹர்த்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்பு பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவும் அன்று.

மனிதப் பிறவியற்ற ஐந்துக்களிடமிருந்து கூடப் பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகள் உண்டு. ரிஷ்ய சிருங்கர் மானியிருந்தும், ஜாம்பூர் நரியிலிருந்தும் வால்மீகர் புற்றிலிருந்தும், கெளதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிறோம். அது போக வலிஸ் ஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர். அகஸ்தியர்கலசத்தில் பிறந்ததாகச் சொல்லுவார்கள். வியாக்ர்மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர் முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவி வகை தெரியாமலேயே இருக்கிறது. ஆகையால் பிராமணத்வம் பிறப்புப் பற்றியதன்று. அறிவினால் பிராமணன் எனக் கொள்வோமென்றால் அதுவுமன்று. rத்தியர் முதலிய மற்ற வர்ணத்தவர்களிற் கூட அநேகர் உண்மை தெரிந்த

146