பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமின்மை, பல தேச விவகாரங்கள் தெரியாமை, மூடகர்வங்கள், முதலியவற்றால் லசஷ்மியை இழந்தோம். மேற்படி குணங்கள் இன்னும் நம்மை விட்டு நன்றாக நீங்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு முக்காலணா வரும்படியென்று கணக்காளிகள் சொல்லுகிறார்கள். அதாவது நரகத்துன்பம் உலகத்தில் வேறெந்த நாட்டிலும்

இப்படியில்லை.

இந்த நிலையில் நமக்குள்ளே பலர் பலவிதமான இகழ்ந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. மிகுந்த செல்வமுடைய நாடுகளிலேகூச மனிதர் பணத்துக்காக எத்தனையோமானங்கெட்ட காரியங்கள் செய்கிறார்கள். ஏழை தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன் பிழைப்பதே பெரிய காரியம்.

பணம் பொதுக்கல்வி விடுதலை மூன்று இல்லாவிட்டால் அந்தநாட்டில் மாணமேது?

மதிப்பு:

நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று தீர்மானம் செய்தால் அவனுக்கு மிகுந்த வலிமை ஏற்படுகிறது. அங்கனம் தீர்மானிக்கப்பட்ட நாயகர்கள் பத்து பேர் சேர்ந்து தமக்குள்ளே ஒரு தலைவனை நியமித்துக் கெண்டால் அந்தத் தலைவனுடைய சொல்லைத் தேசத்தார் அனைவரும் மதிக்கும்படி நேரிடும்.

கூட்டத்திற்கு வலிமையுண்டு. இது ஹிந்துக்களுக்குக் கூடத் தெரிந்த விஷயம். ஒரு பெரிய கூட்டத்தின் தலைவனுக்கு ஒரு மதிப்புண்டு என்பதை ஹிந்துக்கள் ஒன்றாக அறிந்து இருக்கிறார்கள் என்றாலும் புதிது புதிதாகக் கூட் டம் சேர்க்கும் யுக்தி ஹிந்துக்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதரும் புதிய வலிமையும் அதனால் புதிய அனுகூலங்களும் பெறுகிறான். பிச்சைக்காரர் கூடத் தனித்தனியே பிச்சையெடுப்பதைக் காட்டிலும் நூறு பேர் கூட்டம் கூடிப் பிச்சைக்குப் போனால் அதற்கு மதிப்பு மிகுதியுண்டு.

ஹிந்துக்களை உலகத்திார்பாமர அநாகரிகமுக்கால் காட்டு ஜனங்கள் என்று நினைக்கும் படி நாம் இதுவரை இடங்கொடுத்துவிட்டோம்.

இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற்குற்றம் நம்முடையது புறக்கருவிகள் பல.

முதலாவதாக, கிறிஸ்தவப் பாதிரி. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தாங்கள் மத விஷயமான பிரச்சாரத்தை உத்தேசித்து நம்மைக்குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மகத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் சொல்வதாகச்

148