பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சுதந்திரத்திற்காக வேறு எந்த நாட்டு மக்கள் போராடினாலும் பாரதி அவர்களைப் பாராட்டிப் பாடினான்.

இத்தாலி நாட்டு மாவீரன் மாஜினியைப் பாராட்டி பாரதி பாடுகிறார்,

‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்

வன்மை யால் வீழ்ந்து விட்டாய்

மானத்தால் வீழ்ந்து விட்டாய்

துணிவினால் வீழ்ந்து விட்டாய்”

என்றெல்லாம் பெல்ஜியத்தைப் பாராட்டி பாடுகிறார்.

  • புதிய ருஷ்யாவைப் பற்றி ஒரு அருமையான பாடலைப் பாடுகிறார். அப்பாடல் நமது நாட்டில் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிறது. அப்பாடலில்,

‘மகாளி பராசக்தி குஷ்கிய நாட்டில்

கடைக்கண் வைத்தற். அங்கே

ஆகாவென்றெழுந்தது பாத யுகப் புரட்சி

கொடுங்கோலன் அவர் வீழ்ந்தான்

என்று தொடங்கி மிக அருமையான

உணர்ச்சி மிக்க பாடலைப் பாடுகிறார்.

அப்பாடலை

இடிபட்ட சுவர் போல கலி வீழ்ந்தான்

கிருதயுகம் எழுகமாதோ’ என்று முடிக்கிறார்.

தெய்வத்தின் பாடல்கள்

2-1 மகாகவி பாரதி தனது தேச பக்திப் பாடல்களில் தெய்வத்தை இணைத்துப்பாடுகிறார். அவருடைய தெய்வபக்திப் பர்டல்களில் தேசத்தை இணைக்கிறார். தேச விடுதலை தேச நலன், மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை இணைக்கிறார்.

2-2 பாரதியார் தனது கடவுள் வாழ்த்துப் பாடல்களை விநாயகக் நான் மணிப் பாடல்களுடன் தொடங்குகிறார்.

14