பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம் பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிய பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்தவம் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமான ம் அளவில்லை.

இரண்டாவது, அந்நிய தேசப் பண்டிதர் சரித்திரக்காரர் முதலானவர்கள், ஹிந்துக்களை அன்னிய தேசத்தார் போர் செய்யும் தந்திரத்தாலும் வென்று ஹிந்துக்களின் மீது அந்நிய ராஜ்யம் நடைபெற்று வருவதை ஒட்டி வெளிதேசத்து சரித்திரக் காரர் நமது நாட்டு வீரம், ஒற்றுமை முதலிய குணங்களையும் நமது பொது அறிவையும் மிகவும் இழந்த நிலையிலே இருப்பதாகக் காட்டுதல் வழக்கமாக நனபாபற்று வந்திருக்கிறது.

நம்மை உலகத்தார் முன்னே சிறுமைப்படுத்தி மதிப்பு இல்லாமல் செய்து விட்ட புறக்கருவிகள் பல. அவற்றை விரிவாக எழுத வேண்டுமானால் தனிப்புத்தகம் போட வேண்டும்.

‘போனது போகட்டும் இனி மேலாயினும் புத்தியாய் பிழை மனமே” என்று ஒரு பண்டாராப் போட்டு உண்டு. அது போல நடந்ததெல்லாம் நடந்து போய்விட்டது. இனி மேலாயினும் ஹறிந்துக்கள் தம்மை மதிப்புடையோராகச் செய்து கொள்ள வழி தேட வேண்டும். வெளிதேசங்களில் நமக்கு மதிப்பு உண்டாக வேண்டுமானால் அதற்கு மூலம் இங்கே வலிமை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இங்ஙனம் வலிமை சேகரிப்பதற்கு கூட்டம் ஒன்றே உபாயம் எஜ்பதை இந்த வியாசத்தின் தொடக்கத்திலே சொன்னோம். நம்முடைய ராஜரீக நிலைமையைச் சீர்திருத்துவதற்கு பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிகள்மேன் மேலும் வளர்ந்து வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு கூட்டங்களை அதிகப்படுத்துவது வழி கூட்டங்கள் கூடி யோசனை பண்ணுகிற விஷயம் கைகூடும். ஓயாமல் கூட்டங்கள் சேர்த்துத் திரும்பத் திரும்ப உறுதி செய்யப்படும் தீர்மானம். நிச்சயமாகக் கைகூடும். நமது ராஜாங்கக் கூட்டங்களில் இதுவரை சரியான படி சக்தி ஏற்படாத காரணம் யாதெனில் இந்தக் கூட்டங்களில் உண்மையாகவே தேசத்திற்கு அனுகூலம் செய்ய வேண்டும் என்று கருத்துடையவர்கள் மிகச் சிலராகவே இருந்தனர். தேச பாஷைகளிலே பேசுவது கிடையாது. அதாவது பொய் அதிகபட்டுத் தலை து.ாக்கி நின்றது.

இப்போது நாட்டில் உண்மையான தேசபிமானிகள் தொகை அதிகப்பட்டிருக்கிறது. தேச பாஷைப் பேச்சு வழக்கப்பட்டு வருகிறது. ராஜ்ய விஷயங்களுக்கு மாத்திரம் நான் பேசவில்லை. நான்

149