பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற வேண்டும். கைத் தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும். அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடம் தருகின்றன.

திருஷ்டாந்தமாக நேர்த்தியமான சிந்திரங்களும் வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான ஆை டகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் படிப்பில்லை. வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக் கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டு பிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.

இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமும் கொடுப்பது எல்லாவிதமானகைத் தொழில்களும்தற்காலத்தில் இரும்பு எந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பல விதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன செளகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்.

இனி, வர்ணப்படம், தையல் வேலை, மைத் தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின் அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்கு கொண்டு வந்து விடலாம். சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலைகளைக் கொண்டு போய் அமெரிக்காவில் காட்டிய போது அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதை நாம் ஏன் செய்யக்கூடாது?

வெளிநாட்டிற்குக் கப்பலேறிப் போங்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே விதிவான்களே, புத்தி மான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்து கொண்டு, அந்நிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்.

பரோடாவிலிருந்து இதாயத் கான் என்ற சங்கீத வித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்களில் யாத்திரை செய்து வைத்து நம்மிலே சிலருக்கு ஞாபக மிருக்கலாம். அங்கே அவர் சாதாரணமாக இருந்தவர். பின்னிட்டு அவர் பல தேசங்களில் ஸஞ்சாரம் செய்து, பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தி அடைந்திருக்கிறார். அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புதத்திலும்

15||