பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள். சங்கீத ஞானமுடைய தமிழ்ப்பிள்ளைகள், முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் சுலபமான காரியம். தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம். இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால், பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும். அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும் செல்வமும் பெறலாம்.

எவ்விதமான யோசனை எவ்விதமான தொழில் எவ்விதமான ஆசை எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப் போக வேண்டும். ஐரோப்பாவுக்கு அமெரிக்காவும் யாத்திரை செய்யப் போதுமான திரவியம் இல்லாதவர்கள் ஜப்பானுக்கும் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திருகிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால் தமிழ்ப்பிள்ளைகளே, வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும் மனவுறுதியினாலும் பலவிதமா உயர்வுகள் பெற்று புகழுடனும் செல்வத்துடனும் விரயத்துடனும் ஒளியுடனும் திரும்ப வாருங்கள் உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க என்று மிகவும் அருமையான சிறந்த கருத்தை நெட9துெ நோக்குடன் மகாகவி பாரதி நூறாண்டுகளுக்கு முன்னரேயே எடுத்துக் கூறியுள்ளார்.

இன்று நமது நாட்டினர்.அதிலும் சிறப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பல வேறு தொழில்களிலும் உத்தியோகங்களிலும் இல்லாத நாடுகளில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, லத்தீன் அமெரிக்க நாடுகள், பசிபிக் நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ாசிய ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய பல நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும், வியாபாரத்திலும், கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், இன்று தொழில் நுட்ப நிபுணர்களாகவும் பேராசிரியர்களாவும் விஞ்ஞானிகளாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், டாக்டர்களாகவும் (வைத்ய நிபுணர்கள்) ‘பணியாற்றுகிறார்கள். அந்தந்த நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த என்னுடைய நண்பர் ஒருவரின் மகன், ஜெர்மனியில் குடியேறி, அந்த நாட்டின் பிரஜையாக் அவர் குடியிருக்கும் நகரத்தின் மேயராக (நகரசபை தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு பலரும் அவர்கள் வாழும் நகரங்களில் மக்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். சில நாடுகளில் அரசியலில் பங்கு கொண்டு அமச்ைசர்களாகவும் இருக்கிறார்கள்.

152