பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவைகளில் எல்லாம் ஆங்கிலேய படைகள், வியாபாரிகள், அரசாங்க நிர்வாகிகள் ஆகியோர் பெருத்த சேதங்களை உண்டாக்கினார்கள். இத்தோடு சேர்ந்து சில கிறிஸ்தவப் பாதிரிமார் இந்தியாவைப்பற்றி, இந்திய மக்களைப் பற்றி உலக நாடுகளிளெல்லாம் குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலம் பல அவதுறுகளைப் பரப்ப நமது மக்களை சிறுமைப்படுத்தப் பேசினார்கள். நம்மை நாகரிகப்படுத்தப் போவதாகப்

பேசினார்கள்.

ஆப்பிரிக்காக் கண்டத்தில், ஐரோப்பியப் படைகளும் பாதிரியார்களும் சேர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக பல லக்ஷக்கணக்கான பேரைப்படுகொலை செய்தார்கள். அந்த நாடுகளை நாகரிகப்படுத்தப் போவதாகப் பேசினார்கள்.

ஆனால் இந்தியாவில் அவ்வாறு செய்ய முடியவில்லை. பாரத தேசம், அறிவிற் சிறந்த நாடு, உயர்ந்த நாகரிகமும் உழைத்திறனும் நிறைந்த நாடு வேதங்கள் உபநிடதங்கள் முதல், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமாணனவர், இராமலிங்க சுவாமிகள் வரை, உயர்ந்த ஞானம் படைத்த ஞானிகள் பிறந்து வளர்ந்து தர்மத்தை வளர்த்த நாடு.

இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு காலத்திலும் ஆட்சிக் காலத்திலும் கிறிஸ்தவப் பாதிரிமார்களும் பலத்த பிரச்சாரங்களும் மதமாற்ற முயற்சிகளும் செய்தார்கள். பள்ளிக் கூடங்களை வைத்து ஆங்கிலக் கல்வியுடன் சேர்த்து மதப்பிரச்சாரத்தையும் மதமாற்றங்களையும் செய்தார்கள். உலகமெல்லாம் பாரத நாட்டைப் பற்றிப் பல அவதூறுகளைச் செய்தார்கள். இவைகளையெல்லாம் பார்த்தும் கேட்டும் மகாகவி பாரதியார் மிகுந்த வேதனைப்பட்டார். -

பொதுவாக மகாகவி பாரதியாருக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்போ எதிர்ப்போ கிடையாது. எல்லா மதங்களையும் நம்பிக்கைகளையும் சமமாக பாவித்து அவைகளுக்கு மரியாதை செலுத்தக்கூடியவர்.

ஆயினும் சில மூடப் பாதிரியார்கள் இந்துக்கள் மீது பல அவதூறுகளைப் பேசியதையும் பரப்பியதையும் அவரால் சகிக்க முடியாமல் அதைக் கண்டனம் செய்கிறார். அத்துடன் இந்துக்களிடம் உள்ள ஜாதிப்பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் கண்டித்து இந்துக்களை ஒன்றுப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

இந்திய நாடும் நாட்டு மக்களும் ஒற்றுமைப்பட்டால் தான் சுதந்திரத்தை அடைய முடியும் சுதேசி திட்டங்களை நிறைவேற்ற முடியும். இந்தியாவில் கிறிஸ்தவ சபைகளும் பாதிரிகளும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பெரும்பாலும் அன்னிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். இன்றும் கூட அவர்கள் பலருடைய இந்துக்களுக்கு எதிரான அவதூறுப்

154