பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரச்சாரங்கள் தொடருகின்றன. ஆனால் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய இந்தியர்கள் எல்லாம் இந்து மூதாதையர்களின் வாரிசுகள். இந்து பழக்கம் வழக்கங்களும் கலாச்சாரமும் தான் அவர்களிடம் இன்னும் மேலோங்கியிருக்கிறது.

மதவெறி பிடித்த சில மூடப் பாதிரிமார்களின் முயற்சியில் இந்து அமைப்புகள், தெய்வங்கள், கோயில்கள் ஆகியவற்றிற்கு எதிராக் கணக்கற்ற அவதூறுகள் செய்யப்பட்ட போதிலும் இந்து தர்மம் நிலைத்து நிற்கிறது. பல நாடுகளிலும் அந்த நாடுகளின் பூர்வீக நம்பிக்கைகள் தகர்ந்து போய், இஸ்லாமியமும் கிறிஸ்தவப் பாதிரிகளின் முயற்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் பாரத நாட்டில் அவ்வாறு இஸ்லாமும், கிறிஸ்தவமும் வெற்றி பெறவில்லை.

அதிகார பலமோ, ஆட்சி ஆதரவோ பண பலமோ, ஆயுத பலமோ இல்லாமல் இந்து தர்மம், இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக நீடித்து வருகிறது.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற போது பாகிஸ்தான் பிரிந்த போது அதற்கு முன்னும் பின்னும் பல்லாயிரக்கணக்கான பல லட்சக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மதமாற்றம் செய்யப்பட்டார்கள். கட்டாயத்திருமணங்கள் செய்யப்பட்டார்க். ஆயினும் இந்து தர்மம் நிலைத்து நின்று தனது உள் வலிமையைக் காட்டி வருகிறது.

இன்றும் கூட மதச்சார்பின்மை என்னும் போரால் ஹிந்து தர்மம் பழிக்கப்படுகிறது. பல சுயநலசக்திகள் இதில் முனைப்புக்காட்டுகிறது. இன்றும் கூட நமது நாட்டில் முஸ்லிம் என்றால் சிறுபான்மை, கிறிஸ்துவம் என்றால் சிறுபான்மை, ஹிந்து என்றால் மதவெறி என்று பேசப்படுகிறது. அது ஒரு அறிவற்ற மடத்தனமான பேச்சாகும்.

மதச்சார்பின்மை என்பது நமது நாட்டிற்கு பொருந்தாத அவசியமல்லாத தேவையில்லாத ஒரு வாதமாகும். மதச்சார்பில்லாத அரசு என்பது ஐரோப்பாவில் எழுந்த தத்துவமாகும். ஐரோப்பாவில் 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ட 11 நாடுகளிலும், அரசர்கள் மடங்கள், மதஸ்தாபனங்களின் க;ட்டாளிகள் கூட்டாட்சி எதேச் சதிகாரமாக, கொடுங்கோலாட்சி நடைபெற்று வந்தது. அங்கு தொழில் புரட்சியும் நவீன சிந்தனைகளும் தோன்றி போது அதற்கு நிலப்பிரபுத்வ மத, மட அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிற்புரட்சியை ஒட்டி புதிய சிந்தனைப் புரட்சியும் ஏற்பட்டது. அது அன்றைய ஐரோப்பிய மதமடமன்னர் ஆட்சிக்கு எதிராக மறுமலர்ச்சி இயக்கங்கள், ஜனநாயக ஆட்சி முறைகள் தோன்றின. அப்போது அரசுக்கும் மத மட நிறுவன ஆதிக்கம் நீங்க வேண்டும். அரசு மதசார்பற்றதாக இருக்க வேண்டும் என்று குரல் மேலோங்கி ஐரோப்பிய நாடுகளில் மதச்சார்பற்ற அரசுகள் தோன்றி இட்ம் பெற்றன.

155