பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் பெற்ற இனிய பக்தி இயக்கங்கள் மற்றும் பல நமது அறிய நூல்களின் கருத்துக்கள் தத்துவங்களை உலகரியச் செய்ய வேண்டும்.

வாழ்க்கையை, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று பிரித்து படித்த அபூர்வமான தத்துவங்கள், தனிமனித வாழ்க்கையை பிரம்மச்சரியம் இல்லறம் வனப்பிரஸ்தம், சன்னியாசம் என்று பிரித்து அனுபவித்து தத்துவங்கள் மற்றும் பல அறிய அறிவியல் சிந்தனைகளின் தத்துவங்களை உலகெங்கும் பரப்ப வேண்டும். அவைகளை உலகறியச் செய்ய வேண்டும்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா முதலிய தேசங்களை கோடானக் கோடி மக்களைத் திரட்டி, பல போர்களை நடத்தி, கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், பல கோடிக்கணக்கான பணம் பெறும் பொருள்களையும் தொழில்களை அழித்தும் உலகத்தின் பாதி நாசமடையக்காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் அந்தக் கொலைகளுக்கெல்லாம் அந்தந்த தேசத்துப் பாதிரிகள் ஆசி வழங்கினார்கள்.

வியட்நாம் என்னும் ஆசிய நாட்டில் பிரான்சும் அமெரிக்காவும் முப்பு ஆண்டுகாலம் குண்டுகளைப் பொழிந்து போர் நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள். அந்த நாட்டின் மீது அமெரிக்கா வீசிய குண்டுகளை வரிசையாக அடுக்கி வைத்தால் அந்த நாட்டின் நபிலப்பரப்பு பத்தாது என்று சொல்லும் அளவிற்கு அந்த நாட்டின் மீது குண்டுவீசினார்கள். அத்தனை போர்களையும் குண்டு வீச்சுகளையும் சமாளித்து விடுதலைப் பற்று இரு பகுதிகளையும் ஒரன்றிணைத்து இன்று பொருளாதாரத்துறையில் வேகமாக முன்னேறி வருகிறது.

நூறு கோடி ஹிந்துக்களும் ஒரே குடும்பம் போல் ஒன்றுபட்டு விட்டால் இது கை கூடும். தெய்வம் நமக்குத் துணை நிற்கும்.

‘எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம்

சிறந்தது என்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும் என்று மகாகவி பாரதி குறிப்பிடுகிறார்.

தொழிலாளர் ==

தொழிலாளர் என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் சிறந்த சில கருத்துக்களாகக் கூறியுள்ளார். தொழிலாளர் என்று சொல்லும் போது பல்வேறு கைத் தொழில்களிலே பணியாற்றும் தொழிலாளர்கள் வகையாகும். கிராமப்புங்களிலே விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருவகையாகும். நவீன எந்திரத் தொழில்களிலே பணியாற்றும் தொழிலாளர்கள் ஒருவகை.

இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பும் ஆட்சியும் ஏற்பட்டிருந்த காலத்தில் இந்தியத் தொழில்கள் பலவும் அழிந்து விட்டன. சிதைந்து

157