பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரெஞ்சு மக்களிடம் தொழிலாளர்களிடமும் ஆழ்ந்த பதிவை உண்டாக் கியது. நகரசபைகள், முதலிய மக்களமைப்புகளுக்கெல்லாம் கம்யூன் என்று பின்னர் பெயர் வழங்கலாயிற்று.

பின்னர் நாடு முழுவதிலும் நிர்வாக அமைப்பில் கம்யூன்கள் நிறுவப்பட்டன. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த காலனி நாடுகளிலும் கம்யூன் அமைப்பு என்று பெயரிடப்பட்டன. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த இந்தியப் பகுதிகளான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹினம் ஆகிய பகுதிகளிலும் கம்யூன் அமைப்புகள் ஏற்பட்டன. இந்த கம்யூன் அமைப்புகளின் தலைவர் மேயர் அவருக்கு சமுதாயத்தில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.

பாரீஸ் கம்யூன் கிளர்ச்சி, ஐரோப்பிய நாடுகளில் ஆழந்த பதிவுகளை உணடாக்கியது. தொழிலாளர்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்தியது. அவர்களுடைய உரிமைகள் பலவும் அங்கீகரிக்கப்பட்டன. விரிவுபட்டன. கல்லுளி மங்கனாக இருந்த பிரிட்டிஷ் முதலாளிக் கூடகல் நெஞ்சங்கம் இளகி தொழிலாளர்களின் உரிமைகள் பலவற்றை அங்கீகரிக்க வேண்டிய தேற்பட்டது.

ஆயினும் பிரெஞ்சு முதலாளிகள் பலவீனப்பட்டார்கள். ஆங்கிலேய முதலாளிகளின் ஆதிக்கம் உலக அளவில் அதிகரித்து விரிவுபட்டது. இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் ஐரோப்பிய முதலாளிகளின் வியாபாரப் போட்டி ஆதிக்கப்ப போட்டி, தொழில் போட்டி, காலனிப் போட்டிகள் ஏற்பட்டு அவ்வப்போது பல நாளிலும் ஆயுத மோதல்கள் ஏற்பட்டன. i

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் போட்டிகள் கடுமையாகி உலக மோதல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. -

இதற்கிடையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் பாதியில் தொழிலாளர் இயக்கங்களில் ஒரு புதிய காட்சியும் ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு ஆதரவான பல புதிய தத்துவங்கள் தோன்றன. புதிய பல சிந்தனைகள் மேற்கு ஐரோப்பாவில் வெளிப்பட்டன.

1847 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் ஜெர்மனியைச் சேர்ந்த இரு ஜெர்மானிய அறிஞர்கள் காரல் மார்க்ஸ், பிரடரிக் எங்கல்ஸ் தலைமையதில் பல ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர் பலரும் சேர்ந்து கம்யூனிஸ்ட் லீக் என்னும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பை சர்வதேச தொழிலாளர் அமைப்பாக அறிவித்தார்கள். அந்த அமைப்பின் சார்பில் 1848 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை என்றும் அறிக்கை வெளியிட்டார்கள். இந்த அறிக்கையின்

162