பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையமான கருத்து தொழிலாளர்கள் அரசியல் கட்சி அமைத்து அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி தொழிலாளர் ஆட்சியை அமைப்பதாகும்.

கம்யூனிஸ்ட் லீக் அமைப்பும் அதன் கிளைகளும் பல நாடுகளிலும் தோன்றி, ஆயினும் சில ஆண்டுகளிலேயே அவை செயல்படாமல் போயின. பின்னர் முதலாவது அகில்ம் என்னும் பெயரில் காரல் மார்க்ஸ் ஏங்கல் தலைமை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் உருவாயிற்று. அந்த அமைப்பும், பாரிஸ் கம்யூன், அத் பின்னர் ஏற்பட்ட அடக்கு முறைகள் காரணமாக செயல்பட முடியாமல் போயிற்று.

தத்துவ ஞானியான காரல் மார்க்ஸ் முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி நடத்தினார். நவீன எந்திரத் தொழிலாளர்களில் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் உபரி மதிப்பு உண்டாக்கப்படுகிறது. என்றும், அதுவே தொழில்களின் லாபத்தின் அடிப்படையென்றும் அதுவே மனித சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து முதலாளிகளுக்குக் கொள்ளை லாபமாகவும் குவிகிறது என்று எழுதினர். உபரி மதிப்பு என்னும் தத்துவத்தையும் விரிவுப்படுத்தினார். இதன் மூலம் காரல் மார்க்ஸ் மூலதனம் என்னும் நூலை மிகுந்த ஆராய்ச்சி செய்து எழுதினார். அது உலகப் புகழ் பெற்றது.

கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்னும் பெருநூல் உலகப் பெரு நூல்களில் ஒன்று என்று ஐரோப்பாவில் பேசப்படுகிறது. காரல் மார்க்ஸ்-சம் பிரடரிக் எங்கல்லசம் சேர்ந்து உருவாக்கிய தத்துவம் உலகில் மார்க்சியம் என்று பெயர் பெற்று விளங்குகிறது. இந்த தத்துவமும் சிந்தனைகளும் அடிப்படையில் ஐரோப்பிய சிந்தனைகளையும் தத்துவகளையும் அடிப்படையாகக் கொண்டது.

காரல் மார்க்ஸ் காலத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் பல்வேறு முற்போக்கான சிந்தனைகளிலும் கருத்துக்களிலும் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி தத்துவரான சிந்தனைகளிலும், பிரிட்டன் பொருளாதாரக் கருத்துக்களின் சிந்தனைகளிலும், பிரான்ஸ் பல்வேறு மனிதாபிமான சமதர்ம சிந்தனைனக்களிலும் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் மிகவும் தொழில் வளர்ச்சியடைந்த பகுதியில் பிறந்து வளர்ந்தார், படித்தார். பட்டம் பெற்றார். தத்துவ ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அக்காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மனிதத்துவரான சிந்தனைத்துறையில் மிகவும் பிரபலமடைந்திருந்தது. இயக்கவியல் பொருள் முதல்வாத சிந்தனைகள் கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டன. இயக்கவியல் துறையில் ஹெகல் என்னும் ஞானியும், பொருளு முதல் வாதக் கருத்துக்களில் பியர்பாக் என்னும் தத்துவ ஞானி

163