பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைகளை தங்கள் பாடத் திட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

புத்தருடைய தத்துவங்கள் பற்றிய தகவல்கள் போதுமான அளவில் நமக்குக் கிடைக்க வில்லை. அவை சீனாவுக்குச் சென்று அங்கிருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல்தான் அதிகம்.

இவைகளைத் தாண்டி இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் விரிவாக உபநிட தங்களில் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இவைகளைப்பற்றி யெல்லாம் பாரதத்தில் தத்துவ ஞானிகளிடையில் மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

இவைகளைப் பற்றி யெல்லாம் விரிவாகப் பேசுவதற்கு இங்கு இடமில்லை. காரல்மார்க்சிற்கு ஜெர்மன் தத்துவஞானக் கருத்துக்கள் குறிப்பாக அக்காலத்து இயக்கவியல் பொருளுள் முதல்வாதக் கருத்துக்கள் கிரேக்க தத்துவஞானக் கருத்துக்களிலிருந்து, வேறுபட்டவை வளர்ச்சி பெற்றவை. கட்டுப்பாடுகளும் தடைகளும் இல்லாமதவை.

கிரேக்க தத்துவஞானக் களஞ்சியத்தில் அதன் வளர்சியில் பல்வேறு கிறிஸ்தவ சிந்தனைகள், குறிப்பாக கத்தோலிக்க சிந்தனைகள் இணைந்தும் கலந்தும் அவைகளை அன்றைய ஆளும் வர்கங்களுக்கு குறிப்பாக மன்னர்களுக்கும் மடாலயங்களுக்கும் எதிராக இருந்தன. அதனால் காரல் மார்க்ஸின் கருத்துக்களுக்கும் அன்று ஆதிக்கத்திலிருந்த கிறிஸ்தவ மதவாதக் கருத்துக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதே சமயத்தில் காரல் மார்க்ஸ் பிரடரிக் ஏங்கல்லிற்கும் அக்காலத்து பகுத்தறிவு வாதிகளுக்கும் பல பிரச்சினைகளில் கருத்தொற்றுமையும் உடன்பாடும் ஏற்பட்டன.

தத்துவஞானக் கருத்து வளர்ச்சியில் காரல் மார்க்ஸின் மிக முக்கியமான பங்களிப்பு, அவருடைய இயக்கவியல் பொருள் முதல் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் சமுதாய வளர்ச்சிக்குச் செயல் பிரயோகம் செய்து கண்ட விடைகளாகும்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி சார்லஸ் டார்வின் மிக விரிவாக ஆராய்ச்சி செய்து தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். அவை விவரியக் கருத்துக்களுக்கு கிறிஸ்தவ மத நம்பிக்கைக் கருத்துக்களுக்கு மாறுபட்டதாகும். வேறு பட்டதாகும்.

சார்லஸ் டார்வின் விட்ட இடத்திலிருந்து ஹென்றிமார்கன் மனித சமுதாய வளர்ச்சியின் தொடக்கத்தைப் பற்றி விவரித்துக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து மார்க்ஸ்- ஏங்கல்ஸ் குடும்பம், தனிச் சொத்துடைமை அரசு பற்றிய தங்கள் கருத்துக்களை வெளியிடகிறார்கள். அவைகள் ஐரோப்பிய வரலாற்றிற்கு பொருந்துவன. ானால் பாரத சமுதாயத்திற்கு கொஞ்சமும் பொருந்தாதன வாழும் நமது வரலாற்றில் சில அடையாளங்க் தென்படலாம். ஆனால் பாரத நாகரிகம் பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தியதாகும்.

165