பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நகரங்களும், சிற்பக்கலையும் இசை நாட்டியக் கலைகளும், நாகரிகமும், வைத்திய முறைகளும் சர்ச்சை முறைகளும், நீர்ப்பாசன முறைகளும் கால்நடை வளர்ப்பும், சாலைகளும் கப்பல் கடல் போக்குவரத்தும் மிகவும் பண்டைய காலத்திலிருந்து தோன்றி வளர்ந்து விரிந்தவை. பாரத நாடு பழம் பெரும் நாடு. விரிவான நாடு பரந்த தேசம் அதனால் அதன் முன்னேற்றம் மாற்றங்கள் நிதானமாகவும் சற்று மெதுவாகவும் இருந்திருக்கலாம். பாரத நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி மிகவும் விரிவுபட்டதாகும்.

ஆங்கிலேயப்படைகளும் ஆட்சியாளர்களும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு ஆயுத பலத்தால் காட்டு மிராண்டித்தனப் போர்க்கால் பாரத நாகரிகத்தை அழிக்க முயன்றார்கள். ஆயினும் இந்திய நாகரிகத்தின் ஒரு ஒரத்தைத்தான் அவர்களால் சேதப்படுத்த முடிந்தது. ஆனால் அந்த சேதம் கடுமையான. அந்தப்புண் மிக ஆழமானது. புற்று போல் ஆகிவிட்டது. அதை விரைவில் நல்ல சிகிச்சை செய்து ஆற்ற வேண்டும். இயற்கையாகவே சில புண்கள் ஆறி வருகின்றன. விரைவில் அவை குணமடையும். நமது புகழ் பரவும் உலகை அங்கீகரிக்கச் செய்யும்.

தத்துவஞானக் கருத்துக்களைப் பெருத்தவரை இஸ்லாமிய கிறிஸ்தவ, மதக்கருத்துக்களும், தத்துவ ஞானக் கருதுக்களும் பாரதத்தின் நம்பிக்கைகளையும் சமயக் கருத்துக்களையும் தத்துவ ஞானக்களையும் வெற்றி கொள்ளவில்லை. வெற்றி கொள்ள முடியவில்லை என்றும் கூறலாம். பாரதத்தின் செழுமை மிக்க கருத்துக்கள் புதிய வடிவங்கள் பெற்று துளிர்த்து வருகின்றன. அவை விரைவில் மனம் வீசிப்பரவும்.

கார்ல் மார்க்ஸின் தத்துவான சிந்தவையின் அடுத்த பிரிவு வரலாற்றியல் பொருள் முதல் வாதம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். காரல் மார்க்ஸின் வரலாற்றில் பொருள் முதல் வாதக் கருத்துப்படி புராதனப் பொது சமுதாய அமைப்பிலிருந்து, நிலப்பிரபுத்வ சமுதாயத்திற்கும், நிலப்பிரபுத்வ சமுதாயத்திற்கும் அதிலிருந்து முதலாளித்துவ சமுதாயத்திற்கு அங்கிருந்து சோஷலிச கம்யூனிஸ் சமுதாயத்திற்கும் உலகம் மாறும், என்பதாகும். அத்தகைய சமுதாய மாற்றத்திற்கு அடிப்படைக் கருவியாக இருப்பது உற்பத்திக் கருவிகளில் ஏற்படும் மாற்றங்களாகும் என்று குறிப்பிடுகிறார்.

மனித சமுதாயத்தின் நிலை பாட்டிற்கும், உறுதிப்பாட்டிற்கும், அதன் வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் அடிப்படையானது. அதன் தேவைகளைச் செய்து குறிக்கும் உற்பத்தி சக்திகளுமாகும்.

மனித சமுதாயத்தின் தேவைகள் என்பது அது உயிர் வாழ்வதற்கும் நிலை கொள்வதற்கும், அசைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான உணவு, உடை, உறைவிடம், பொழுது போக்கு, விளையாட்டு வசதிகள் முதலியவைகளாகும். இவை வரலாற்று வளர்ச்சியில் அனைத்துரைகளிலும்

166