பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கங்களிலும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. விரிவடைந்து கொண்டே செல்கிறது.

இத்தகைய மனிதனுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால் அவை உற்பத்தி செய்யப்பட வேண்டும். தேவைகள் அதிகரித்துக் கொண்டே பெருகிக் கொண்டேயிருக்கும் போது அவைகளின் உற்பத்தியும் இணையாகப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும். வினியோகமும் சீராக அமைய வேண்டும். இதில் குறைகள் ஏற்பட்டால் சமுதாயக் குழப்பங்கள் ஏற்பட எதுவாகும்.

சமுதாயத் தேவைகளை உற்பத்தி செய்வதற்கு சமுதாயத்திற்கு உற்பத்தி சாதனங்கள் அவசியமாகிறது. அதாவது உற்பத்தி சாதனங்களானவன, அடிப்படை உற்பத்தித் சாதனங்களான நிலம், தொழிற்படிட்டரை தொழிற் சாலைகள், கல்வி நிலையங்கள், உற்பத்திக் கருவிகள் உழைப்பு ஆகியவைகளாகும். உற்பத்தி சாதனங்களும் உற்பத்திக் கருவிகளும் உழைப்பு சக்தியும் இணையும் போது உற்பத்திப் பொருள்கள் உண்டாகின்றன. அவை இனி சமுதாயத்தின் தேவைக்கேற்றபடி விநியோகம் செய்யப்படுகின்றன.

இன்வைகள் உற்பத்தி முறைகளாகும். இவை சீராக இருக்கும் போது சமுதாய சீராகச் செல்கிறது. இதில் குலைவோ சிதைவோ ஏற்படும் போது சமுதாயக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய சமுதாயக் கழப்பங்கள் சமுதாய மாற்ற்ததிற்கு வழி கோருகின்றன என்று காரல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஒரு சமுதாயத்தின் அடிப்படை என்பது அதன் உற்பத்தி சாதனம், உற்பத்திக் கருவி, உழைப்பு சக்தி, உற்பத்திப் பொருள் வினியோக முறை ஆகியவை அடங்கிய உற்பத்தி முறையாகும். இந்த உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் கட்டுமானமாக, அதன் அரசியல் அரசு, கலை, கலாச்சாரம், இலக்கியம் முதலியவை அமைகின்றன. இந்த மேல் கட்டுமானம், அதன் உற்பத்தி முறையை ஆதாரப்பட்டும் அதே சமயத்தில் அதைப் பாதுகாத்தும் நிற்கிறது.

உற்பத்தி முறைகளுக்கு மையமாக இருப்பது உற்பத்திக் கருவிகளும் அவைகளை இயக்கும் உழைப்பு சக்தியுமாகும். இந்த உற்பத்திக் கருவிகளில் ஏற்படம் மாற்றங்களினால் உழைப்பு சக்தியிலும் உற்பத்தி முறையிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன.

உற்பத்தி முறை என்றும் சமுதாய அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் சமுதாயத்தின் மேல் கட்டுமானங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கு அடிகோருகின்றன. இவ்வாறு சமுதாயம் முழுவதிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இதையே சமுதாய வரலாறு எடுத்துக் காட்டுகிறது என்று

167