பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங்குடியை வாழ்விப்பான்

சிந்தையே இம்மூன்றும் செய்

இம்மூன்றையுமே பாரதி விநாயகரிடம் வேண்டுகிறார்.

“அகண்டவெளிக்கண் அன்பினையே

சூழ்க துயர்கள் தொலைந்திடுக.

தொலையா இன்பம் விளைந்திடுக

வீழ்க கலியின் வலியெலாம்

கிருதயுகத்தினை மேவுகவே’

என்று தொடங்குகிறார்.

இதே பாடல் தொகுப்பில், “மொய்க்கும் கவலைப்பகை போக்கி முன்னோன் அருளைத் துணையாக்கி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி

உடன் இ! இரும்புக் கினையாக்கிப்

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார்கண்முன்னே மெய்க்கும் கிருதயுக்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே”

என்று பாரதியார் இந்தப் பாடலில் விநாயகர் வழிபாடாகத்தனது தத்துவ ஞானக் கருத்தை வெளியிடுகிறார்.

அடுத்து வரும் முருகன் பாட்டில் முருகா முருகா முருகா! என்று மும்முறை கூவியழைத்து தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே, சரணம் சரணம் என்றும் வேலன்பாட்டில்:

‘பல்லினைக்காட்டி வெண் முத்தைப்

பழித்திடும் வள்ளியை ஒரு

பார்ப்பனக் கோலம் தரித்துக்

காந்தொட்ட வேலவா என்று குறிப்பிடுகிறார்.

16