பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தது. நவீன அரசியல் பொருளாதாரத்துவ சிந்தனையில் குறிப்பான பல அறிஞர்களும் வெளிப்பட்டிருந்தார்கள். ஆடம் ஸ்மித், டேவிட் ரெக்கார்டோ போன்ற நவீன முதலாளித்துவ சிந்தனையில் புகழ் பெற்றிருந்தார்கள். உழைப்பின் மூலம் ஏற்படும் உற்பத்தி மதிப்பு போன்ற தத்துவங்கள் பிரபலமடைந்திருந்தன. இன்னும், உழைப்பு, கூலி, விலை, லாபம் பண்டம், பண்டப் பரிவர்த்தனை பண்ட மதிப்பு, முதலீடு, மூலதனம் முதலிய பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி நவீன அரசியல் பொருளாதார சிந்தனைகளைப் பற்றி காரல் மார்க்ஸ் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டுபிடித்து அவைப்பற்றி புதிய கருத்துக்களை

வெளியிட்டார்.

நவீன எந்திரத் தொழில் பழைய தொழில்கள், தொழில்முறைகளிலிருந்து

முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. அதில் பிரிட்டன் முன்னணியில்

இருந்தது.

நவீன எந்திரத் தொழில் அமைப்பு மூலதனத்தின் முதலீடு

அடிப்படையில் அமைந்திருந்தது. ஒரு தொழில் தொழிற்சாலை, உற்பத்தி விற்பனை அதற்கான முதலீடுகள் மூலதனம் கீழ்க்கண்ட அடிப்படையில்

அமைந்திருந்தது. ஒரு தொழிற்சாலை அமைந்து செயல்படுவதற்கு உற்பத்தி நடைபெறுவதற்கு கீழ்க்கண்ட சாதனங்களும் அவைகளுக்கான முதலீடுகளும் தேவைப்படுகின்றன.

1. தொழிற்சாலை அமைவதற்கான இடம் நிலம், அந்த நிலம் வர்ங்குவதற்கான முதலீடு.

2. கட்டிடம் கட்டுவதற்கும் கட்டி முடித்து அதில் தொழிற்சாலை அமைப்பதற்கும் எந்திரங்கள் நிறுவுவதற்குமான முதலீடு.

3. எந்திரங்கள் வாங்குவதற்கும் அவைகளை நிர்மானிக்கவுமான அவைகளைப் பராமரிப்பதற்குமான முதலீடு.

4. மூலப் பொருள் வாங்குவதற்கான பணம்- அதற்கான முதலீடு.

5. விசைசக்தி அதற்கான பன ஒதுக்கீடு தொடர்ச்சியான முதலீடு.

6. உழைப்பு சக்தி: தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை வாங்குவதற்கான முதலீடு, கூலித் தொகை.

7. உற்பத்திப் பண்டம்: அதை சேமிக்க ஏற்பாடு அதற்கான விலை. ஆகியவை அடங்குகின்றன.

இவைகளில் நிலம், கட்டிடம், எந்திரங்கள், விசைசக்தி, மூலப் பொருள் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்படும் மூலதனத்தை அசையா மூலதனம் என்று மார்க்ஸ் கூறுகிறார்.

169