பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைக்கும் மக்களும் தங்கள் உயிரை இழந்து பலவீனப்பட்டனர்.

முதலாவது உலகப்போர் 1914-18 ஏற்பட்டதன் முதல் விளைவு, முதல்

முறிவு உலகில் நிலப்பரப்பில் பெரிய நாடான ஆறில் ஒரு பகுதியாக இருந்த, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரவியிருந்த ரஷ்யாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமாகும்.

ரஷ்யாவில் ஜார் மன்னருடைய ஆட்சியிருந்தது. ‘ம்’ என்றால் சிறைவாசம். ‘ஏன் என்றால் வனவாசம் என்று சொல்லும்படி கொடுங்கோலாட்சி நடைபெற்று வந்த பேயாட்சி முறிந்தது. ரஷ்யாவில் நடைபெற்ற கொடுங்கோலாட்சியின் கொடுமைகளைப் பற்றி மகாகவி பாரதியார் ஒரு தனியான பாடலே பாடியுள்ளார்.

மாகாளி பராசக்தி உருசிய நாட்

டினிற் கடைக்கண் வைத்தாள்

அங்கே,

ஆகாவென்றெழுந்து பார் யுகப்புரட்சி

கொடுங்கோலன் அலறி விழந்தான்

வாகான தோள் புடைத்தார் வானமரர்

பேய்களெல்லாம் வருந்திக்க

ண்ணிர்

போகமற் கண்புகைந்து மந்தனவாம்

வையத்தின் புதுமை காணிர்

என்றும்,

இம்மென்றால் சிறைவாசம்,

ஏனென்றால்

வனவாசம், இவ்வாறங்கே

செம்மையெலாம் பாழாகிக்

கொடுமையே .F.

அறமாகித் தீர்ந்த போதில்

171