பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற தொரு அருமையான கருத்துச் செரிவு மிக்க பொருள் மிகுந்த பாடலை மகாகவி பாரதி பாடினார்.

மகாகவி பாரதியின் இந்தப் பாடலுக்கு ஈடாக உலகில் எந்தக் கவியும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை.

மகாகவிக்கு இந்தியாவில் கொடுமைமிக்க பிரிட்டிஷ் ஆட்சியின் அனுபவம் இருக்கிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்வ மன்னராட்சியின் கொடுமைகளைப் பற்றி மத, மட, ஆதிக்கத்தின் கெடுமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருகிறார். அறிந்திருக்கிறார். அந்த உணர்வு நிலையில் மகாகவி பாரதியின் உள்ளத்திலிருந்து குமுறியெழுந்த சொற்களை இந்தப் பாடலில் நாம் காண முடிகிறது.

ரஷ்யாவில் லெனின் தலைமையில் 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற (அக்டோபர்) புரட்சி வெற்றி பெற்று லெனின் தலைமையிலான சமூகஜனநாயக தொழிலாளர்கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்த சமூகஜனநாயகத் தொழிலாளர் கட்சிக்கு பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி என்னும் பெயர் ஏற்பட்டது. ரஷ்யா நிலப்பரப்பில் ஒரு பரந்த பெரிய தேசம். அது ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரவியிருந்தது. 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் லெனின் தலைமையில் இந்தத் தொழிலாளர் புரட்சி தொடர்ந்து நீடித்து ரஷ்யா முழுவதிலும் அதன் அதிகாரம் பரவி 1922ஆம் ஆண்டு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நிலை பெற்றது. இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய உள்நாட்டுக் கலவரங்களில் ஏராளமான தொழிலாளர்களும் விவசாயிகளும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இறுதியில் லெனின் தலைமையில் ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்தது. சோவியத் சோஷலிஸ்டுக்கு குடியரசுகளின் யூனியன் என்று பெயர் பெற்று புதிய ஆட்சி அமைந்தது.

புதிய புரட்சி அரசு தனது போரை நிறுத்திக் கொண்டு ஜெர்மனி முதலிய நாடுகளுடன் தனியான போர் நிறுத்தம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு தனது பக்கத்து போரை நிறுத்திக் கொண்டது. சாகுபடி நிலம் அனைத்தும் விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிநியோக செய்யப்பட்டது. தொழிற் சாலைகள் அனைத்தும் தேசவுடைமை ஆக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, கூலி நிர்ணயம், விடுமுறை, வேலைப் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசாங்க நிர்வாகம் சோவியத் மயமாக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி அடிப்படையில் ஆரம்பக்கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் தொடர் கல்வி உயர் கல்விக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டது.

நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி உள்நாட்டு சந்தை சீரமைப்பு, கல்வி மாதர் நலம், அரசாங்க நிர்வாக

| 73