பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரமைப்பு முதலிய பரிதுறைகளிலும் சமசீரான வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஐந்தாண்டு திட்டங்களும் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான ஏற்பாடுகளும் சோவியத் யூனியனில் தொடங்கப்பட்டதும் அவை நிறைவேற்றப்பட்டதும், உலக அரசியல் பொருளாதார செயல்பாட்டில் முதல் அனுபவமாகும். அதில் பல குறைகளும் பற்றாக்குறைகளும் இருந்தன. இருப்பினும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த ரஷ்யாவிலும் ஜார் ஆட்சியின் கீழிருந்த பின் தங்கிய நாடுகளிலும் சோவியத் முயற்சிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டது.

இதற்கிடையில் ரஷ்யாவிலும் ஜார் ஆட்சி இருந்த பழைய ரஷ்யசாம் ராஜ்ய நாடுகளிலும் சேர்ந்து சோவியத் யூனியன் என்னும் பெயரில் ஒரு புதிய தொழிலாளர் ஆட்சி ஏற்பட்டிருப்பதை மேற்கு ஐரோப்பிய முதலாளித்து நாடுகள் சகித்துக் கொள்ளவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஒன்று சேர்ந்து படை திரட்டி புதிதாக அமைந்த சோவியத் நாட்டின் மீது படையெடுத்தன. இந்தத் தலையீடுகளை எதிர்த்து இளம் சோவியத் யூனியன் தற்காப்புப் போரை நடத்தி வெற்றியும் பெற்றது. பின்னர், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளின் தூண்டுதலிலும் உதவியிலும், சோவியத் யூனியனில் இருந்த பழைய முன்னாள் நிலப்பிரபுத்து முதலாளித்துவ சக்திகள் ஆய்தம் தாங்கிய உள்நாட்டுக் கலவரங்களை நடத்தி குழப்பங்களை உண்டாக்கினார்கள். அதையும் இளம் சோவியத் யூனியன் சமாளித்து வெற்றி கண்டது. மறுபக்கம் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்றியது.

புரட்சிப்படைகளுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், உணவு மற்றும் அத்தியவசியப் பண்டங்களின் பற்றாக்குறைகள் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், யுத்தத்தால் ஏற்பட்டிருந்த பாதிப்புகள், உள்நாட்டுக் குழப்பங்கள், வெளிநாட்டுப் படைகளின் தலையீடுகள், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் நாட்டின் ஒட்டு மொத்தமான அரசியல் பொருளாதார பின் தங்கிய நிலை ஆகியவைகளை சமாளித்துத்தான் புதிய சோவியத் அரசு சமாதானம், விவசாய சீர்திருத்தம் தொழிலாளர் நலச்சட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள், பெண்கள் சம உரிமைச்சட்டங்கள் அனைவருக்கும் கல்வி புதிய பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் அமைத்தல் முதலிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை என்னும் பெயரில் புதிய பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கான குனிந்த தலை நிமிரவில்லை. அதற்குள், இரண்டாவது உலகப் பெரும் போரைத் தொடங்கிய ஜெர்மனி மற்றும் இதர பாஸ்-சப்படைகள் 1940 ஜூன் மாதத்தில் புதிய இளம் சோவியத் யூனியன் மீது தனது

174