பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்போரை திசை திருப்பியது. நாஜ் படைகள் சோவியத் யூனியன் மீது திரும்பியது.

போர் உக்கிரமாயிற்று. ஜெர்மன்ந்ாஜி படைகள் பல ஆயிரம் வெற்றிகளை அடைந்தது. நாஜி ஜெர்மன் படைகள் சோவியத் பூமியில் முன்னேறி, லெனின் கிராட், மாஸ்கோ ஸ்டாலி கிராட் நகர்களை நெருங்கியது.

சோவியத் யூனியன் யுத்தத்தின் கனமான பறவைத்தாங்கி தேச பக்திப்போரில் ஒரு மனிதன் போல் பங்கு கொண்டது.

உலகில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான இரண்டாவது உலகப் பெரும் போரில் பாஸிஸ் சக்திகளாக ஜெர்மனி, இத்தாலி, கிழக்கில் ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளுக்கு எதிராக நின்ற நேச நாடுகளின் தலைமையில், பெரிய வல்லரசுகளான அமெரிக்க ஐக்கிய நாடு பிரிட்டன் ஆகியவைகளுக்கு ஈடாக சமமாக சோவியத் யூனியன் நின்றது. நாஜி. பாஸிஸ் அச்சு நாடுகள் போரில் தோற்றன. சோவியத் யூனியன் உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. பிரிட்டன், அமெரிக்க, ஐக்கிய நாடுகள், பிரான்ஸ் ஆகிய ஏகாபத்ய நாடுகள் போரில் வெற்றி பெற்றாலும் அரசியல் பொருளாதாரத் துறையில் உலக அளவில் பழைய நிலையிலிருந்து பொருளாதாரத்துறையில் பலவீனப்பட்டு நின்றன. உலகப் அரசியலிலும் பொருளாதார ராணுவத்துறையிலும் சோவியத் யூனியன் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக, ஒரு வல்லரசாக ஐக்கிய நாடுகளில் ரத்து அதிகாரம் பெற்ற நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.

சோவியத் வெற்றியினால், அதன் அண்டை நாடுகளான, போலந்து, செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா, யுகோஸ்லோவியா முதலிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பழைய நிலப்பிரபுத்வ முதலாளித்துவ ஆட்சி முறைகள் மாறி, சோவியத் யூனியன் சாரமான, த்ொழிலாளர் கட்சிகளின் புதிய ஆட்சி முறைகள் ஏற்பட்டன.

உலக அரங்கில் சோவியத் யூனியன் மற்றும் அதன் சார்பு நாடுகள் ஒரு பலமான கூட்டு அரசியல் சக்தியாக விளங்கின.

உலக நாடுகளில் அநேகமாக இரு முகாம்கள் ஏற்பட்டன என்று கூறலாம்.

அத்துடன் இதுவரை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளாக இருந்த காலனி நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நாடும் விடுதலை பெற்று சுதந்திரமான நாடுகளாக வெளிப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் பெற்றன.

உலகில் ஏறுப்பட்ட மற்றொரு முக்கியமான மாற்றம், உலகில் மக்கள் தொகையில் பலம் பெற்ற முதன்மை நாடான ஆசிய நாடான சீனாவில் 1949 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டதாகும். அதைத் தொடர்ந்து வியட்நாம், பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்யங்களின் பயங்கரமான

175