பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பெயர் பெற்றது. இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த கட்சிகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான செல்வாக்குமிக்க தொழிலாளர் கட்சிகளாக வளர்ந்தன. அக்கட்சிகளின் தலைவர்கள் அரசியலில் மார்க்சியக் கட்சிகளிலிருந்து வேறு சற்று சமரசமான முறையில் செயல்பட்டன.

இந்த இரண்டாவது அகிலத்தின் தொடர்பாக ரஷ்யாவில் ரஷ்யன் சோஷியல் டெமக்ராட்டிக் லேபர் பார்ட்டி (ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) எனறு பெயரில் மக்களிடம் பரலவாகச் செல்வாக்கு பெற்றுப் பரவியிருந்தது. இக்கட்சியின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று மன்னராட்சி முறையை மாற்றுவது அல்லது மன்னர் மற்றும் நிலப்பரப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து ஜனநாயக முறையில் மக்களாட்சியைக் கொண்டு வருவது என்பதாகும்.

இவ்வாறு ரஷ்யாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் விளாடிமிர் லெனின் தலைமையில் பலரும் தீவிரமான கருத்துக் கொண்டு செயல்பட்டார்கள். ஜார் மன்னராட்சியை நீக்குவது முற்றிலுமான தொழிலாளர் ஆட்சியை நிறுவுவது என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது.

ரஷ்யாவில் 1917 அக்டோபரில் விளாடிமிர் லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சிக் குழுக்களில் ரஷ்யாவின் தொழிலாளர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள், அங்கம் வகித்து சோவியத் என்னும் பெயரின் எல்லா மட்டங்களிலும் ஆட்சி நிறுவனங்களை அமைத்தார்கள்.

ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இரண்டாகப் பிளந்தது. அதில் மெஜாரிட்டி குழுவினர். மைனாரிட்டிக் குழுவினர் என்று பிரிந்தனர். இதில் மெஜாரிட்டி கழுவினர்களின் தலைவராக விளாடிமிர் லெனின் இருந்தார். மெஜாரிட்டி என்றால் பெரும்பான்மையினர், அதற்கு ரஷ்ய மொழியில் போல் விவிக் என்று பெயர். போல் விவிக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று பெயர். அவர்கள் லெனின் தலைமையில் திரண்டனர். சோவியத்துகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு லெனின் தலைமையிலான குழுக்களுக்கும், அப்போது பல பகுதிகளிலும் பலமாக இருந்த சோஷியல் ரெவலூஷகிஸ் என்னும் சமூகப் புரட்சியாளர் குழுககள் செயல்பட்டனர்.

லெனின் தலைமையில் இருந்த போல்விவிக்குகள் பின்னர் தனியாக ரஷ்யக்கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரிட்டு, காரல் மார்க்சின் புரட்சிகர சோஷலிஸ்க் கருத்துக்களின்படி ரஷ்யப்புரட்சி நடத்திச் சென்று வெற்றி பெற்றனர். விளாடிமிர் லெனின் தலைமையில் ரஷ்யக்கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஒரு தொழிலாளர், விவசாயிகள் புதிய ஆட்சி ரஷ்யாவில் அமைந்தது. லெனின் தலைமையில் ரஷ்யக்கம்யூனிஸ்ட் கட்சி, புதிய

179