பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பு விதிகளின் படி அமைந்தது. புரட்சிக் கடமைகளை நிறை வேலைத்திட்டத்தை அமைத்துக் கொண்டு புரட்சியை நிறைவேற்றி புதிய ஆட்சியை அமைத்தார்கள்.

இந்தப் புரட்சிகர அரசு தொழிலாளர் விவசாயிகள் அரசு என்று தன்னை அழைத்துக் கொண்டு பல தீவிரமான திட்டங்களை நிறைவேற்றினார். அவைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

லெனின் தலைமையில் புதிய வேலைத்திட்டம், புதிய அமைப்பு விதிகள் வகுக்கப்பட்டு, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் ஆட்சி அமைத்தது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த இதர பகுதிகளிலும் சோவியத் ஆட்சி விஸ்திரிக்கப்பட்டது. இவ்வாறு 1922 ஆம் ஆண்டில் சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் ...... என்னும் அமைப்பு ஏற்பட்டது. இதை சோவியத் யூனியன் என்று சுருக்கமாக அழைத்தனர்.

ரஷ்யாவில் சோவியத் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் லெனின் தலைமையில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி புனரமைக்கப்பட்டது. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் இதர ஐரோப்பிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு அவைகளை இணைத்து மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் என்னும் பெயரில் புதிய புரட்சிகரமான கம்யூனிஸ்ட் அகிலம் சர்வதேசத் தொழிலாளர் அரசியல் அமைப்பாக உருவாயிற்று. இந்த அகிலம் மூன்றாவது அகிலம் என்று பிரபலமாயிற்று.

மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையில் ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் உருவாக்கப்பட்டது. மூன்றாவது அகிலத்தின் வழிகாட்டுதலில் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் புனரமைக்கப்பட்டு நிறுவப்பட்டன. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாயின.

ஆசியாவில், சீனா, வியட்நாம், இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாயின. இந்தியாவில் 1925 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் நிறுவப்பட்டு மூன்றாவது அகிலத்துடன் இணைக்கப்பட்டது.

இந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அன்னிய ஆங்கிலேய ஆட்சியினரால் தடை செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய ஆரம்ப கர்த்தாக்கள் மீது ஒரு கடுமை சதி வழக்கைத் தொடுத்தது. அந்த சதி வழக்கிற்கு மீரத் சதி வழங்கு என்று பெயர். மீரத் நகரில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டதால் மீரத் சதி வழக்கு பெயர் பெற்றது. இந்த சதி வழக்கு பல ஆண்டுகள் நடந்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் பல ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவில் தான்

180