பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தலைப்பில் மகாகவி பாரதியார் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

‘தொழிலாளர்கள் என் போர் சரீரத்தால் உழைத்து வேலை

செய்கிறவர்களே என்று சிலருக்கு எண்ணமிருக்கலாம். அது தப்பு, சரீரத்தாலாகட்டும், புத்தியாலாகட்டும் முதலாளிக்குட்பட்டு வேலை செய்கிறவர்கள் எல்லாருமே தொழிலாளர்கள் என்று அந்த வியாசம் எழுதியவர் சொல்லுகிறார். இது நம்முடைய தேசதிதார் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம். ஏனெனில் நம்மவருடைய மனதில் இந்த விஷயம் பதிவுபெறுதல் மிகவும் சிரமம்.

குமாஸ்தாக்கள், உபாத்தியாயர்கள் முதலியவர்களும் தொழிலாளிகளே என்று இந்த வியாசம் எழுதியவர் சொல்லுகிறார். எனவே என்போன்ற நூலாசிரியர்களும் தொழிலாளிகளே முதலாளி கூட இன்றியமித்தல், வேலையை மேற்பார்த்தல், வியாபார சம்மந்தமான கணக்குகளை கவனித்தல் முதலிய செய்கைகளால் தொழிலாளி ஆகிறான்.

‘முதலாளி தொழிலாளி என்னும் இந்தக்கவி பேதமே நமது நாட் டுக்குப் புதிது. நூலாசிரியரும் வீதி பெருக்குவோரும் ஓரினமாகச் சேர்ந்து வைசியருக்கு விரோதமாகப் போராடுதல் நமது தேசத்தில் நேற்றுவரை நினைக்கொணாதோர் செய்தியாக இருந்தது. இன்று சாத்தியமாகி விட்டது. இது ஐரோப்பிய தொழில் முறைமைகளும் கொள்கைகளும் நம்முடைய தேசத்தில் பரவுவதால் ஏற்படும் இன்றியமையாத விளைவாகும்.

நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி, முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி சரிரபலத்தால் மாத்திரமே செய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான் காம் வர்ணம் மற்ற தேசங்களில் நமது நாட்டைப் போல இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லை, யெனினும் உலகம் முழுமையிலும் ஒருவாறு இந்த ‘சதுர்வர்ணம் (அதாவது நான்கு வர்ணங்களென்றவகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டுவந்திருக்கிறது. சில இடங்களில் மாத்திரம் குருக்களைக்கா ட்டிலும் அரசர் உயர்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். சில நாடுகளில் அரசரே குருக்களாகவும் இருந்தனர். மற்றபடி உலகம் முழுமையிலும் குருக்கலும் சாஸ்திரிகளும் தலைமைப்பகுதியாகவும் அரசர் வணிகர் கைத் தொழில் செய்வோர் என்பார் முறையே தனித்த பகுதிகளாகவுமே கருதப்பட்டு வந்தனர்.

ஆனால், சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் ஸ்கலஜனங்களும் சமானமென்றும் ஆதலால் பிறப்புப் பற்றியேனும் உடைமை பற்றியேனும் தொழில் பற்றி யேனும் மனிதருக்குள்ளே எவ்வித மேன்மை தாழ்வுகளேனும் உணவு உடை முதலிய அவசியப் பொருள்களின்

188