பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணிய பாவமெல்லாம்

பரிதி முன் பணி போலவே

நண்ணிய நின் முன் இங்கு

நசித்திட வேண்டும் அன்னாய்!

இன்னும் மகாசக்தி வெண்பா, ஒம்சக்தி, பராசக்தி, சக்திக்கூத்து சக்தி, வைய முழுதும், சக்தி விளக்கம் சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம், சக்தி திருப்புகழ், சிவசக்தி புகழ், பேதை நெஞ்சே, மகாசக்தி, நலகாத்திரிப்பாட்டு, காளிப்பாட்டு, காளி ஸ்தோத்திரம், மகாசக்தி பஞ்சகம், மகாகாளியின் புகழ், முத்து மாதிரி, தேச முத்துமாரி, கோவிந்தன் பாட்டு என்னும் தலைப்புகளிலும் கருத்து மிக்க பல பாடல்களை மகாகவி பாரதி பாடுகிறார்.

கண்ணனை வேண்டுதல் என்னும் பாடலில் வேத வானில் விளக்கி,

‘அறஞ்செய்மில் சாதல் நேரினும் சத்தியம் பூணுமின் தீதகற்றுமின்” என்றும்.

‘ஒப்பில்லாத உயர்வோடு கல்வியும் எய்ப்பில் வீரமும், இப்புவியாட்சியும்

தப்பிலாத தருமமும் கொண்டு யாம் அப்பனே நின்அடிபணிந்துய்வமமால்

என்று தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் இணைத்து அருமையாகப்படுகிறார்.

திருவேட்கை என்னும் தலைப்பிலான பாடலில்,

‘செல்வம் எட்டுப் மெய்தி. நின்னால்

செம்மையேறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை-உலகில்

இல்லையாக வைப்பேன்”

என்று தெய்வ பக்தியின் சிறப்பான மனித வாழ்வையும் இணைத்து சிறப்பாகப் பாடுகிறார்.

திருமகள் துதி, திருமகளைச் சரண் புகுதல் என்னும் தலைப்புகளிலும், இன்னும் கலைமகளை வேண்டுதல், வெள்ளைத் தாமரை, என்னும் தலைப்பின் கல்வியின் பெருமையை மகாகவி மிகவும் சிறப்பாக உயர்த்திப் பாடுகிறார்.

| 8