பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கத்தைக் கைக்கொள்ளலாயினர். நாட்பட நாட்பட யந்திரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணி முதலிய இதரகண்டத்து ஊனங்களிடையே அதிகமாக விற்கப்படலாயயிடின. இங்கிலாந்து முதலிய தேசத்தார் தம் நாடுகளுக்கு வேண்டியதுணிகள் முதலியன வேயன்றி உலக முழுமையிலும் கொண்டுவிற்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் தாம் புதிதாய்க் கண்டு பிடித்த பூத சக்திகளாகிய நீராவியையும் மின்சாரத்தையும் கொண்டுவேலை செய்வாராயினர். இதனால் உலகத்துச் செல்வம் மென் மேலும் ஐரோப்பாவிற்குச் செல்ல இடமுண்டாயிற்று. அதனின்றும் ஆரம்பத்திலே பல தொழிலாளிகள் வேலையிழந்து அங்குப் பட்டினி கடக்க நேர்ந்த துன்பத்துக்குத் தக்க நிவாரண முண்டாய் அந்த நிவர்த்தி மேன் மேலும் மிகுதிப்பட்டுவந்தது.

அதற்குமுன் இருந்த ஜன சமூக வரம்புகளும் நியதிகளும் சிதறிப்போய் விட்டனவே யெனினும் பெரும்பாலும் தொழிற்கூட்டத்தாருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆசியாவிலும் பிற கண்டங்களிலும் லட்சம் கோடிக் கணக்கான ஜனங்களுக்கு ஐரோப்பிய துணி முதலியன ஏற்றுமதியாகத் தலைப்பட்டதினின்றும் ஐரோப்பிய தொழிற் கூட்டத்தாரிடையே தொழிலற்றவராய் வருந்திய ஜனங்களின் தொகை மென்மேலும், குறையலாயிற்று எனினும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்குமிடையே ஏற்பட்ட, கr. பேதங்கள் தீரவில்லை. அ ைவ மிகுதிப்பட்டுக்கொண்டேவந்தன. இதற்குக் காரணம் அங்கு தொழிலாளர்களுக்கு குள்ளே சங்கசக்தி அபாரமாக அதிகப்பட்டுவிட்டது. ஒவ்வொரு இலையிலும் பதினாயிரம் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்தனர் இவர்களுக்குள்ளே பலர் கல்வி கற்றோர்.ஆயினர்.

இதனிடையே மேற்கூறப்பட்ட மைத்துவக்கொள்கை அதாவது குற்றங்களுக்குத் தண்டனை விதப்பதில் செல்வருக்கும் எளியோருக்கும், மேல் குலத்தாருக்கும் கீழ்க்குலத்தாருக்கும் சட்டம் சமானமாக வேலை செய்ய வேண்டுமென்றும் உணவு முதலிய செளகர்யங்களிலும் லெளகீக மரியாதைகளிலும் மானிடருக்குள்ளே எக்காரணம் பற்றியேனும் யாது ஒரு வேற்றுமையும் நடைபெறக்கூடாதென்றும் உலகத்தில் எல்லாமனிதரும் எல்லாவகைகளிலும் சமானமான வரென்றும் பிரான்ஸ்தேசத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுச்சிபெற்று நாட்பட நாட்பட ஐரோப்பா முழுவதிலும் வியாபித்துக் கொண்டுவந்ததொருகொள்கை தொழிலாளரிடையே மிகுதியாகப் பரவலாயிற்று. அதன்மேல் இத்தொழிலாளர், ‘நாம் பாடுபட்டு உற்பத்திசெய்யும் பொருள்களைவிற்று இந்த முதலாளிகள் இத்தனை பணம் சம்பாதிக்கிறார்கள், நாமோ பெரும்பாலும் குடியிருக்கக் குடிசைகளும் சாக்கடைகளும் தின்பதற்குப் பழைய ரொட்டிகளும் பழைய மீனுமாக வாழ்ந்து வருகிறோம். இவர்கள் மாளிகைகளில் வாழ்ந்து குபேர சமிபத்தை அனுபவிக்கிறார்கள். இது

190