பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஷ்டப்படி வினியோகிக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டாலன்றி தங்களுக்கு முதலாளிகளிடமிருந்து நியாயம் கிடைக்க இடமில்லை என்று நினைக்கிறார்கள்.

‘எனவே இங்கிலாந்து முதலிய தேசங்களிலுள்ள தொழிலாளிகள் பார்லிமென்ட் சபையில் தாம் ஆதிக்கம் பெற்று அதன் மூலமாக தம்முடைய கட்சியாரே மந்திரிகளாகும் படியான நிலைமையை ஏற்பாடுசெய்து கொண்டு இவ்வழியாலே ராஜயாதி காரதிதையும் தம்முடையவதாகச் செய்து கொள்ளும்படி மும்முரமான முயற்சிகள் செய்துவருகின்றனர். ஆனால், மேற்படி தேசங்களில் ராஜ்யாதிகாரம் இப்போது பெரும்பாலும் முதலாளிகளுக்குச்சார்பாக இருப்பதால் இந்த முதலாளிகள் தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் தொழிலாளிகளைத் தலைதுாக்க வொட்டாமல் அழுத்திவிட முயற்சி செய்து வருகிறார்கள். இதனால், அவ்விரு திறத்தாருக்குள்ளே சமாதான மும் சிநேகிதத்தின் மையும் ஏற்படுவதற்கு வழியில்லாமல் நாளுக்கு நாள் மனஸ்தாபங்களும் அவ நம்பிக்கையும் வயிற்றெரிச்சல்களும் மிகுதிப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன.

இந்தியாவில் இந்த விபரீதமான-நிலைமை ஏற்பட வேண்டுமென்பது நம்முடைய விருப்ப மன்று ஐரோப்பாவில் ஆரம்ப முதலாகவே தொழிலாளரும் முதலாளிகளும் தொழிலின் பெருமையையும் அவசியத்தின் மையையும் நன்கு கிருதியிருப்பார்களாயின் இப்போது அங்கே இவ்வளவு பயங்கரமான நிலைமை ஏற்பட்டிராது. எனவே இந்தியாவில் முதல் முதலாகத் தொழிலாளர்கிளர்ச்சி தொன்றியிருக்கும் இந்த சமயத்திலே நம்முடைய ஜனத்தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதாரவுடன் கலந்து போத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலேயே முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும். தொழிலின் மஹிமையையும் இன்றியமையாத் தன்மையும் எல்லா ஜனங்களையும் அறியுமாறு செய்ய வேண்டும்.

ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப் பங்களெல்லாம் இங்குவந்து சேரஹேது உண்டாய் விடும்.

ரூஷ்யாவில் சமீபத்தில் அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும்பல புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைன்யங்களில் பெரும்பகுதியார் தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதினின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற் கட்சிக்கிடைத்துவிட்டது. தேசத்து நிதியனைத்தும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச்செய்து எல்லாரும் தொழில் செய்து ஜீவிக்கும் படி விதித்திருக்கிறார்கள். தேசத்துப் பிறந்த

192