பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸர்வஜனங்களுக்கும் தேசத்துச்செல்வம் பொது என்பது உண்மையாய்விடின் ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி ஸ்கலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் rேமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும்.

எனவே ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல. ஆனால், அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்குதருவனவாம். ருஷ்யக் கொள்கைகளை இப்போது அனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம்பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஊனம் கொலையுண்டு மடிந்து போவார்கள் வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவரையொருவர் வெடிகுண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் கொல்லத் தொடங்குவார்களானால் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?’ என்று மகாகவிபாரதி விளக்கிக் கூறிவினா எழுப்புகிறார்.

இந்தியாவில் இதே நிலைமை நேரிடாத வண்ணம், ஊனத்தலைவர்கள் இப்போதே தீவிரமாகவும் பலமாகவும் வேலைசெய்யத் தொடங்க வேண்டும். தொழிலாளரிடம் பொது ஜனங்களும் முதலாளிகளும் மிகுந்த மதிப்புச் செலுத்தும் படி ஏற்பாடு செய்வதே இந்த வேலையில் முதற்படியாம் ‘தம்முடைய காரியத்தைச் செய்ய வேண்டியதே தொழிலாளியின் ஆத்மாவுக்கு ஈசனால் விதிக்கப்பட்ட புருஷார்த்தம்’ என்று முதலாளிகளில் பலர் நினைக்கிறார்கள் யந்திரங்களைப் போலவே இவர்கள் மனிதரையும் மதிக்கிறார்கள் பொதுவாக ஏழைகளிடம் செல்வருக்கு உள்ள அவமதிப்பு அளவிடும் தரம் அன்று இவ்விதமான எண்ணம் நம்முடைய தேசத்திலும் செல்வர்களிடமிருந்து மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வெண்ணத்தை உடனே மாற்றித் தொழிலாளர்களையும் மற்ற ஏழைகளையும் நாம் ஸ்ாதாரண மனிதராக நடத்த வேண்டும். அதிலும் தொழிலாளர்களின் விஷயத்தில் நாம் உயர்நீதி மதிப்பு செலுத்த வேண்டும். இவ்வித் மதிப்பினால் நாம் தொழிலாளர்களின் விஷயத்தில் என்னென்ன கடமைகள் நேரும் என்பதைப் பின்னொரு வியாசத்தில் பேசுகிறேன், என்று மகாகவி பாரதி பேசுகிறார்.

இந்தக் கட்டுரையில் மகாகவிபாரதியார் ‘ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல ஆனால், அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தி இருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு வருவனவாம்

193