பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று குறிப்பிடுகிறார் அத்துடன் ‘ருஷ்யக் கொள்கைகளை இப்போது, அனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள் என்று குறிப்பிடுகிறார். இது முழுமையான உண்மையாகும்.

தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் தேவைப்படும் என்று காரல்மார்கஸ்-ம், விளாடிமிர்லெனினும் தங்களுடைய கொள்கை அறிக்கைகளிலும் வேலைத்திட்டங்களிலும் மிகவும் தெளிவாகவே குறிப்படிட் உருக்கிறார்கள். இந்தக் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் எல்லாநாடுகளிலும் உள்ளகம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் கொள்கையைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர். நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ஒருபகுதியினர். அமைதியான வழிகளில் அதிகாரத்தைக்கைப்பற்றும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வோம் என்று ஒருவாறு ஆலோசனை செய்து கருத்துக் கூறியுள்ளார்கள்.

சுதந்திர இந்தியாவில் 1952 முதல் எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் பங்கு கொண்ட பின்னரும் கம்யூனிஸ்டுகளில் பெரும் பாலோர் அந்த வன்முறை வழிக்கருத்தைக் கைவிட விடவில்லை. =

முகுந்துப்பார்வை

பருந்துப்பார்வை என்றும் தலைப்பில் மகாகவிபாரதியார் சிலகருத்துக்களை மிகவும் வலுவாக உறுதிபடக் கூறிப்பிடுகிறார்.

ஹிந்து மதம் உண்மை.

ஒரு தேசத்தார் ராஜ்யமஹிமை பெற வேண்டுமானால் அவர்கள் ஏகதேவ பக்தி (ஒரே கடவுள் பக்தி)யுடையவர்களாக இருக்க வேண்டும் என்று ‘மாடர்ன் ரிவ்யூ” பத்திரிக்கை சொல்லுகிறது. ‘முகம் மதியர், கிறிஸ்தவர், யூதர் முதலியவர்களைப் போல ஒரே கடவுளை நம்பித் தொழவேண்டும் கிறிஸ்தவர்களிலே ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் பலஞானிகளையும் தாயையும் வணங்குகிறார்கள். அப்படியில்லாமல் ப்ரோதஸ் தாந்து கூட்டத் தாரைப் போல ஒற்றைக் கடவுளைத் தொழி வேண்டும் இல்லா விட்டால் இராஜ்ய வலிமை உண்டாகாது என்று அந்தப் பத்திராதிபர் நினைக்கிறார். இது பிழை. இதற்கு மனுஷ்ய சரித்திரத்திலே எவ்விதமான ஆதாரமும் கிடையாது, ஹிந்து மதம் உண்மை எல்லா மதமும் உண்மைதான். ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. உண்மையாலே தான் எல்லா நன்மையும் உண்டாகும். என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

194