பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கட்டங்கள் மகாகவி பாரதி பள்ளிக் கட்டிடங்களைப் பற்றி ஒரு சிறந்தகருத்தைக்கூறுகிறார். நமது பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் அவைகளின் கட்டிடங்கள் இந்திய சிற்பக்கலையின் படி கட்டப்பட வேண்டும் என்பது மகாகவியின் கருத்தாகும். இந்திய சிற்பக்கலையில் தமிழ்நாட்டு ஸ்தபதிகள் மிகவும் சிறந்தவர்கள் நாட்டில் சிறந்த கட்டிடங்களை உருவாக்குவதற்கு தமிழ்நாட்டு ஸ்தபதிகளின் திறமையை ஆற்றலை அவர்களுடைய தொழில் நுட்பத்திறனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மகாகவியின் கருத்தாகும்.

ஸ்யின்ஸ் பயிற்சிபற்றி

நமது தேசத்தில் (ஸயின்ஸ்) சாஸ்திரப் படிப்பு வளரும் படிசெய்ய வேண்டும். ஸ்பின்ஸ் மனித ஜாதியை உயர்த்திவிடும் அது

இஹத்துக்குமாத்திரமேயன்றி பரத்துக்கும் ஸாதனமாகும். ஸாஸ்திரப்படிப்பு முக்கியம் அதிலேதான் நன்மையெல்லாம் உண்டாகிறது.

நமது பூர்வீகர் ஸயின்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாமல் விளங்கினார்கள் அந்தக் காலத்து லெளகீக சாஸ்திரம் நமக்குத் தெரிந்த மாதிரி வேறு யாருக்கும் தெரியாது. இந்தக் காலத்துலங்கதிதான்நமக்குக் கொஞ்சம் இழுப்பு என்று மகாகவி குறிப்பிடுகிறார். ---

மகாகவி கூறுகிறார்

எவனும் உடம்பை உழப்பினாலும் அசைவினாலும் சுறு சுறுப்பாகவைத்துக்கொள்ளவேண்டும். மனதை உத்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிர முண்டாகும். உடம்மை தீவிரமாகச் செய்து கொண்டால் மனது உற்சாகத்துடனிருக்கும். மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது கவலை மனிதனை அரித்துக் கொண்டுறு விடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான் சொல்ல வில்லை.

அவை பரமாத்மாவினால் நியமிக்கப்பட்டன. இராமன், கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித் துறவு கொள்ளவில்லை. ஆனால், இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போககாது. அதனால் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து அனுபவிக்க வழியில்லாமல் போய்விடும். அறிவு தான்ராஜார்; மனமும் இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கி வாழ வேண்டும் இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும். -

எனவே மனவுறுதி, ஸ்ந்தோஷம் உலகை நடத்தும் சக்தி, நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீரவுழைப்பு முதலிய நற்குணங்களைக்கைக் கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும்.

196