பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உம்பிலே நோயில்லாமல் வலிமை யுடன் இங்கே நூறாண்டுவாழலாம் என்று மகாகவி கூறி முடிக்கிறார்.

செல்வம் (1)

செல்வம் (1) - செல்வம் (2) என்னும் தலைப்புகளில் மகாகவி பாரதியார் மிகவும் சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். அவைகளை மீண்டும் மீண்டும் படித்து அதன் கருத்துக்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். இக்கருத்துக்கள் மகாகவியின் மனிதாபிமான உணர்விலிருந்தும் நியாய உணர்விலிருந்தும் எழுந்தவையாக உள்ளன. அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளால் இந்திய மக்களுக்கு ஏற்பட்டிருந்த துன்ப துயரங்களை மகாகவி நேரில் கண்டும் நேரில் அனுபவித்தும் இருக்கிறார் இத்தனை கொடுமைகளையும் தாங்கி நின்று மக்கள் அமைதியான முறைகளில் கடும் முயற்சி யெடுத்து மாற்றங்களைக் காண வேண்டிய முயற்சிகளை மகாகவி பாரதியார் எடுத்துக் கூறுகிறார்.

அந்நிய ஆங்கிலேயர் ஆட்சி கொடுமை மிக்கது. அந்த ஆட்சியின் கொடுமைகளைப் பற்றி மகாகவி பல பாடல்களிலும் பல இடங்களிலும் நெஞ்சுறுகப்பாடுகிறார். கொடுமையும் கொடுங்கோன்மையும் மிக்க அந்நிய ஆட்சியை எதிர்த்து இந்திய மக்களின் நியாயங்களை நிறுவுவதற்கு வலுவான மனவுறுதி வேண்டும் என்பது மகாகவியின் கருத்து அமைதி வழிகளிலேயே எல்லா நியாகங்களுக்கும் தயராக இருந்து அந்த மகத்தானகாரியத்தை சாதிக்க வேண்டுமென்பது மகாகவியின் சீக்கிய கருத்தாகும்.

செல்வம் (1) என்னும் தலைப்பில் மகாகவி ருஷ்யப்புரட்சியைப் பற்றியும் அதன் நிகழ்வுகளைப் பற்றியும் மிகவும் தொலை நோக்குடன் மிகவும் நுட்பமான கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்.

ருஷ்யாவில் சோஷலிஸ்ட் கடசியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது. சோஷலிஸ்ட் கட்சியென்பதை தமிழில் சமத்துவக் கட்சி என்று சொல்லலாம். அது கூட சரியான மொழி பெயர்ப்பாகாது. சொத்து விபாகம் செய்திருப்பதில் இப்போது சிலர் செல்வர் என்றும், பலர் ஏழைகளென்றும் ஏற்பட்டிருப்பதை மாற்றி உலகத்திலுள்ள சொத்தை அதாவது பூமியை உலகத்து ஜனங்களுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதும், தொழில் விஷயத்தில் இப்போது போட்டி முறை இருப்பதை மாற்றி கூறியுழைக்கும் முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரவேண்டுமென்பதும் மேற்படி கட்சி.ஆருடைய முக்கியமான கோட்மபாடு. ஆதலால் இந்தக் கட்சிக்கு ஐக்கியக்கட்சி என்று பெயர் சொல்லுவது பொருந்தும் என்று தோன்றுகிறது. இதை அபேதக் கட்சி என்று சொல்வாருமுளர்.

இந்தக்கட்சி இந்தியாவில் ஏன் இதுவரை ஏற்பட்டு

| 97