பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வீடு தோவம் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன்வர்கள் நகர்களெங்கும் பலபல பள்ளி

என்றும்,

‘இன்னறுக்கனிச்சோலைகள் செய்தல்

இனி நீர்த்துண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ளதருமங்கள் யாரும் பெயர் விளங்கி யொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கேள்வி

ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல் என்று பாடுகிறார்.

ஞானப் பாடல்கள் என்னும் தொகுப்பில் அச்சமில்லை என்னும் தலைப்பில் மிக அருமையான ஈடு இணையற்ற ஒரு பாடலை பாரதி பாடுகிறார்.

‘உச்ச மீது வானிடிந்து விடுகின்ற போதிலும்

அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப

தில்லையே’

என்று ப்டி முடிக்கிறார்.

எல்லாத்தீமைகளுக்கும் அச்சமே காரணம். அச்சம் நீங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி விடும் என்னும் உயர்ந்த தத்துவத்தை உறுதிபடக் கூறுகிறார். - -

அடுத்து ஜயபேரிகை என்னும் பாடலில்,

பயமெனும் பேய் தனையடித்தோம் என்று தொடங்கி,

‘'காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றும்,

19.