பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக் காட்ட முயன்றால் அத்தொகுதி அத்தொகுதி ஆயிரம் சுவடிகளுக்கு மேலாய் விடும். இவ்விஷயமாக இதரபாஷைகளிலுள்ள நூல்களிலும் இவ்வாறே செறிந்து கிடக்கும் வாக்கியங்களும் திருஷ்டாந்தங்களும் கணக்கில்லாதனவாகும்.

எல்லா தேசங்களிலும் எல்லா பாஷைகளிலும் அறிஞரெல்லாம் ஒருங்கே வறுமைதான் எல்லா நரகங்கள்ைக் காட்டிலும் மிகக் கொடியது என்பதை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். ஆதலால் இந்த விஷயத்துக்கு நாம் மேற்கோள் ஆதாரங்களை அதிகமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வறுமை மிக மிகப் பெரிய இகழ்ச்சியும் துன்பமுமாகும், என்பது கற்றோர்க்கு மட்டுமே அல்லாது கல்லாதார்க்கும் நன்கு தெரிந்த விஷயமே யாம்.

எல்லா உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. ஆனால், வறுமை மரணத்திலும் பெரிய துன்பமென்றுணர்ந்த ஏழைகள் மாதத்திரமே, “தெய்வமே எனக் கொளுசாவுவராதா என்று சில சமயங்களில் வேண்டுவது காண்கிறோம்.

இந்த ஏழ்மை இத்தனை கொடிதாக ஏற்பட்ட காரணந்தான்யாதெனில் சொல்லுகிறேன். உணவுதான் ஜீவைந்துக்களின் அவசரங்கனைத்திலும் பெரிய அவசரமானது.

i

‘மானம் குலம கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் முயற்சி தாளாண்மை தேனின் கசிவந்த சொல்லியர் மேற்காமுறுதல் பத்தும்

பசிவந்திரப் பறந்து போம்.”

எனவே இவ்வுலக இன்பங்கள் பெருமைகள் எல்லாவற்றிற்கும் அஸ்திவார பலம் உணவு உணவு இல்லாத இடத்தில் அவை நிற்க வழியில்லை மேலும், வெறுமே உயிர்தரித்திருப்பதற்குக் கூட ஆகாரம் அவசியமாயிருக்கிறது. சாறில்லாவிட்டால் உயிர் இல்லை. இது கொண்டே பெரும்பான்மையோருக்கு அன்றாடம் உணவு கிடைக்குமென்ற கூறுதியில்லாமலும், பலருக்கு உணவே கிடையாதென்பது உறுதி யில்லாமலும் ஏற்படுத்தி வைக்கும் வறுமையை இத்தனை பெரிய கொடும் பகையாகக் கருதி மனிதர்கள் அஞ்சுகின்றனர்.

முற்காலத்தில் இந்திய செல்வத்துக்கும் கல்விக்கும் வீரத்துக்கும், பராக்கிரமத்துக்கும், சாஸ்திரங்களுக்கும், பல விதமான கைத்தொழில் களுக்கு விசேஷ ஸ்தலமாக விளங்கிவந்தது. இக்காலத்திலே இந்தியா பஞ்சத்துக்கும் பசி மரணத்துக்கும் வறுமைக்கும் தொத்து நோய்களுக்கும் ..வதஸ்தவமாயிருக்கிறது.

200