பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைக்கிறான். கல்வியுடையோன் கல்லாத மக்களிடம் வைத்திருக்கும் இகழ்ச்சியோசொல்லும் தாமன்று ‘விலங்கொரு மக்களனையர் இலங்கு நூல் கற்றாரோடேனையவர்’ அதாவது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எத்தகைய பேதமிருக்கிறது. அத்தனை பேதம் கற்றாருக்கும் கல்லாதாருக்குமிடையே உளது, இந்தக்குறள் கல்விப் பெருமையுடையோர் அஃதில்லாதாரின் விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தை நன்கு விளக்குகிறது. இங்ஙனமே பாடத் தெரிந்தவன் அது தெரியாதவரைக் குறைவாக எண்ணி நடத்துகிறான். நெட்டையாக இருப்பவன் குள்ளனைக் குறைந்த ஜாதியாக எண்ணுகிறான். மேற்குலத்தில் பிறந்தவன் தாழ்ந்த குலத்தானை இகழ்ச்சி செய்கிறான். சுருங்கச் சொல்லுமிடத்தேயாதேனுமொருவித விசேஷ அனுகூலம் படைத்தோர் அஃது படையாதாரை இழ்வாச எண்ணி நடத்துகிறார்கள். இங்கனம் கோடிவிதமான காரணங்களை உத்தேசித்து மனிதருக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் கஷ்டங்களும் மனஸ்தாபனங்களும் பொறாமைகளும் கர்வங்களும் போராட்டங்களும் எண்ணற்றனவாகின்றன. இதனால் இந்த உலகத்தில் மனித வாழ்க்கை நரக வாழ்க்கை போலத் தீராத் துன்பமாக முடிந்திருக்கிறது. __

ஏனென்றால் ஒருவன் எத்தனை விசேஷ அனுகூலங்கள் படைத்திருந்த போதிலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்குக் குறையுள்ளவனாகவே இருக்கும்படி இயற்கையமைப்பு இருக்கிறது.

அளவிறந்த கல்வியுடையவன் கொஞ்சம் குள்ளனாக இருந்தால் போதும். பிடித்தது சனி, நெட்டை மனிதரைக் கண்டு அவன் பொறாமை கொள்வதினின்றும் நெட்டையாட்கள் அவனை இகழ்ச்சி செய்வதனின்றும் அவனுக்குப் பலவிதமான அனர்த்தங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. அவன் தான் குள்ளனாகப் பிறந்ததைப்பற்றி ஓயாமல் மனம் நொந்து சாகிறான்.

மிகுந்த செல்வமுடியவன் கொஞ்சம் கரு நிறமுடையவனாக இருந்தால் போதும் வந்தது வினை செந்நிறம் உடையவர்களாலே அவனுடைய வாழ்க்கை நரகத்தைப் போல் ஆக்கப்படுகிறது.

இங்ஙனம் எத்தனையோபேதங்களால் மனிதனுக்குப் பல தொல்லைகள் விளைகின்றன. எனினும் நான் தொடக்கத்திலே கூறியபடி செல்வத்தால் ஏற்படும் வேற்றுமைகளே சால மிகக் கொடி யன. செல்வமுடையவன் செல்வமில்லாதவரிடத்துக் கொண்டிருக்கும் இகழ்ச்சியும் செல்வமில்லாதவன் செல்வமுடையோரிடத்தே கொண்டிருக்கும் பொறாமையும் மனிதருக்குள்ளே ஏற்படுவதில்லை.

‘கண்ணுடையோ ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

202