பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணுடையார் கல்லாதவர்.”

என்று வள்ளுவர் சொல்லியபடி படித்தவன் படியாதவனை வெறுமே குருடனாகக் கருதி நடத்துகிறான். பணமுடையவனோபணமில்லாதவனைப் பிணமாக நினைக்கிறான்.

இதனிடையே மனித ஜாதி நாகரிகத்தின் முறச் ஸ்மத்வம் அவசியம் என்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக் கொண்டே வருகிறது. எத்தனை வேற்றுமைகள் குணத்தாலும் செய்கையாலும் பிறப்பாலும் மற்ற வீண் நியமங்களாலும் மனிதருக்குள் ஏற்பட்டிருந்த போதிலும் அந்த வேற்றுமைகளை யெல்லாம் புறக்கணித்து விட்டு எல்லாரும் ஈசனுடைய மக்கள் அல்லது அம்சங்கள் என்ற பரமசத்யத்தை மனதில் தரித்து எல்லாரையும் நிகராகப் பாவிக்க வேண்டும் என்ற கருத்து வேதரிவிகளாலும், கிறிஸ்து புத்தர் முதலிய அவதார புருஷர்களாலும் மனிதருக்கு வற்புறுத்திக் கூறப்பட்டன. அவர்களையொட்டி எண்ணிறந்த ஞானிகளும் பண்டிதர்களும் அக்கொள்கையைப் பல வகையாலே பரவச் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

இங்ஙனம் பரமார்த்த ஞானமுடையோர் ஆதிகாலம் தொட்டு ஸ்மத்வக் கொள்கையைப் பரப்பி வருதல் ஒரு புறத்தே நிகழவும் சென்ற சில நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பலவிதவான்கள் தெய்வத்தைப் பற்றி யோசனை செய்யாமல் வெறுமே மானிட வாழ்க்கை ஸாகமாகவும் “ஸ்மாதானமாகவும் நடைபெற வேண்டும் என்கிற லெளகீக காரணத்தைக் கருதி ஸகல ஜனங்களும் சமத்துவமாகவே நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். இக்கொள்கை நாட்பட நாட்பட ஐரோப்பாவிலும் அதன் கிளைகளாகிய அமெரிக்கா ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும் ஐரோப்பிய நாகரிகத்தை அனுசரிக்க விரும்பும் ஜப்பான் இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்து வருகிறது.

ஒற்றைக் குடும்பத்தில் ஒரு பிள்ளை புத்திமானாகவும் கல்வியுடையவனாகவும் இருக்கிறான். மற்றொரு பிள்ளை கல்வியறிவற்ற மூடனாகவே இருக்கிறான். ஒருவன் சிவப்பாக இருக்கிறான். மற்றொருவன் கருநிறமுடையவனாக இருக்கிறான். ஒருவன் பலசாலியாக இருக்கிறான். மற்றொருவன் பலவீனமாக இருக்கிறான். ஒருவன் தைர்யசாலியாக இருக்கிறான். மற்றொருவன் கோழையாக இருக்கிறான். ஒருவன் நெட்டை மற்றொருவன்குட்ட ஒருவன் அழகுடையவன் மற்றொருவன்முகமெல்லாம் அம்மைத் தழும்புடையவனாய் ஒருகண் பொட்டையாக இருக்கிறான் எனினும் அறிவுடைய தாய் தந்தையர் இந்த மக்களுக்குள்ளே எவ்விஷயத்திலும் வேற்றுமை பாராட்டாமல் இவர்களை சகல விதங்களிலும் ஸ்மமான அன்புடன் நடத்தி வருகிறார்கள்.

203