பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபோலவே மனித ஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ளே இயற்கையாலும் மானிடர் தாமாகவே ஏற்படுத்திக் கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக செளகரியங்கலும் பலருக்குக் குறைந்த செளகரியங்களும், சிலருக்கு மதிப்பும் பலருக்கு அவமதிப்பும் சிலருக்கு லாபங்களும் பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும் மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும் நவீன ஐரோப்பிய ஸித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான சித்தாந்தமாகும். இந்தக் கொள்கைக்கு எல்லாமதங்களும் சார்பாக இருப்பதை உத்தேங்சிடக்குமிடத்தே இது நாளடைவில் ஐரோப்பாவில் மாத்திரமின்றி உலகம் முழுமையிலும் பரிபூரணமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த சித்தாந்தம் பரிபூரண ஜெயமடைந்து மனிதருக்குள்ளே சகஜதர்மமாக ஏற்பட்ட பிறகு தான் மானிடர் உண்மையான நாகரிகம் உடையோராவர்.

மேலும், மானிடருக்குள்ளே இயற்கையால் ஏற்பட்டிருக்கும் வர்ண வேற்றுமைகள், உயரவேற்றுமைகள் சரீரபல வேற்றுமைகள் முதலியனவே மாற்றமுடியாதவை. செயற்கையால் உண்டாகிய கல்வி வேற்றுமைகள் செல்வ வேற்றுமைகள் ஜாதிபேதங்கள் முதலியன எளிதாக மாற்றிக்கொள்ளக்

கூடியன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல தேசங்களிலும் ஏற்கனவே பிற் கூறிய வேற்றுமைகளை நீக்குவதற்குப் பலமான முயற்சிகள் நடைபெற்று வந்து நல்ல பயன்களும் ஏற்பட்டுவிட்டன. எல்லோருக்கும் கல்விகற்பித்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் முக்கியமாக வலிமையடைந்து வருகிறது. தேசத்து மக்கள் அத்தனைபேருக்கும் கட்டாயமாகவும் இனமாகவும் கல்வி கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்துவருகிறார்கள். இந்த முயற்சி இன்னும் அதிக பலமடையும். நாளுக்குநாள் இந்த முயற்சியில் சக்தியும் வேகமும் அதிகரித்து வருகின்றன. இதனின்றும் இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும், அந்த முறையைக் கைப்பற்றி நடக்கும். இந்தியா, ஜப்பான் முதலிய தேசங்களிலும் படிப்புத் தெரியாதவர் ஒருவர் கூட இல்லாமற்போய் விடுவார்கள் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஜாதி பேதங்கள் இந்தியாவிலேயே சிதறுண்டு வருகின்றன. எனில் மற்ற நாடுகளைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.

இதுபோலவே, செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும் உலகத்தில் மிகத்தீவிரமாகப் பரவிவருகிறது. ஐரோப்பாவிலே தான் இந்த முயற்சி வெகு மும்மரமாக

204