பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை இன்னல்களால் ஏற்பட்டவைகளே போர்கள் அந்நிய படையெடுப்பு காலங்களிலும் மக்களுக்குத் துன்பதுயரங்களும் பசிபட்டினியும் ஏற்பட்டிருக்கின்றன. அவை தற்காலிகமானவை.

பிரிட்டிஷ் படையெடுப்பு, படைபயணம், பிரிட்டிஷ் ஆட்சி காலங்களில் பாரத நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பசி, பட்டினிக் கொடுமைகள், பாரத நாட்டின் வரலாற்றில் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை. பதினெட்டு பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் பிரிட்ஷ் படைகளால், ஆக்கிரமிப்பு போர்களால், பெகொடுங்கோலாட்சியால் நமது விளை நிலங்கள் பலவு பாழாயின. நீர்நிலைகள் நீர்ப்பாசன நிலைகள் சேதப்பட்டன. கோயில்கள் சிதிலமடைந்தன. போக்குவரத்து சாலைகள் நாசமாயின. உள்நாட்டு வாணிபம் சேதமடைந்தது. உள்நாட்டுத் தொழில்கள். கிராமத் தொழில்கள் குடிசைத் தொழில்கள் நலிவுற்றன. நமது கால்நடைகள் பெரும் அளவில் சேதப்பட்டன. அந்நிய ஆட்சியின் வரிக்கொடுமைகள் அளவுக்கு மீறி மக்களை வாட்டி வதைத்து. ஆங்கிலேய கம்பெனியார் அரசாங்க நிர்வாகத்தையும் வரிவசூல் கணக்குகளையும் ஒருவியாபாரக்கம்பெனி போலவே நடத்தினார்கள். அத்தகைய கொடுமைகள் காரணமாக, தமிழ்நாட்டின் வடபகுதி, ஆந்திரா ஒரிஸா, வங்காளம், பீகார் முதலிய பகுதிகளில் உணவிர்லாமல் வெறும்பட்டினியால் மட்டுமே 40-50 லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள் என்று அரசாங்கக் கணக்கே கூறுகிறது. இதுவே குறைவான மதிப்பீடுதான்.

இக்காலத்தில் மக்கள் பட்ட துன்பதுயரங்களுக்கு அளவேயில்லை. ஏராளமான பேர், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா நாடுகள் மொரிஷஸ், பீஜித்தீனகள் குவானா முதலியமத்திய அமெரிக்க நாடுகள் முதலிய பல நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றனர். அந்தநாடுகளில் தேயிலை ரப்பர், கரும்புத் தோட்டங்களிலே கடுமையான உழைப்பாளிகளாகச் சென்று பிழைப்பு நடத்தினார்கள்.

‘கரும்புத் தோட்டத்திலே’ என்னும் தலைப்பில் மகாகவிபாரதியாரின் கவிதையில்

‘'நாட்டை நினைப்பாரோ - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ? அவர்

விம்மி விம்மி விம்பி விம்மியழுங்குரல்

கேட்டிருப்பாய் காற்றே! - துன்பக்

கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்

209