பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஷ்யவரலாற்றில் குறிப்பிடுவார்கள்.

1922-ஆம் ஆண்டிற்கு ஜாக் கட்சியின் கீழ் இருந்த காலனி நாடுகளும் சுயநிர்ணய உரிமை பெற்று ரஷ்ய நாட்டுடன் இணைந்து சோவியத் யூனியன் (Union of Soviet socialist republics - Garraf ug, G#trops"lsiul ‘ gi, ia luga: , sifai, ஒன்றியம்) என்று பெயர் பெற்றது.

பதினான்கு ஐரோப்பியநாடுகளின் தலையீட்டு யுத்தத்திலும் புதியதாக அமைந்த சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மீண்டும், ஐரோப்பிய ஏகாதிபத்யநாடுகளின் உதவி பெற்று, சோவியத் அமைப்பிற்கு எதிரான உள்நாட்டு சக்திகள் உள்நாட்டுக் கலவரத்தைக் கிளப்பின. உள்நாட்டுக் கலவரங்களும் நான்கைந்து ஆண்டுகள் நீடித்தன. அந்த உள்நாட்டுக் கலவரங்களையும் சமாளித்து சோவியத் ஆட்சி நிலைபெற்று உறுதிப்பட்டது.

இருப்பினும் இந்த ஆண்டுகளில் இதரபல ஐரோப்பிய நாடுகள் பெருளாதார பகிஷ்காரம் செய்தது. சோவியத் நாட்டுடன் இதர நாடுகள் பொருளாதாரவர்த்தக உறவுகளைவைத்துக் கொள்ளவில்லை. சோவியத் பொருளாதாரமும் வர்த்தகமும் தனிமைப்பட்டு நின்றது.

இத்தனை இடையூறுகள் தலையீடுகள், பகிஷ்கரிப்பு களுக்கிடையில் 1930-ஆம் ஆண்டுகளில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. 1936-38ஆண்டுகளில் இதர முதலாளித்வ நாடுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதர நெருக்கடி, சோவியத் பொருளாதாரத்தை அதிகமாக பாதிக்கவில்லை.

ரஷ்யாவில் லெனின் தலைமையில் வன்முறைகள் மூலம் வெற்றி பெற்றதற்கு சில தனி காரணங்கள் உள்ளன என்பதற்கான காரணங்களும் அதற்கான வாய்ப்புகளும் பற்றி பாரதியே கூறுகிறார். ‘பலாத்காரமாக முதலாளிகளின் உடைமைகளும் நிலஸ்வான்களின் பூமியையும் பிடுங்கித் தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்றும் கொள்கை ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்குப் பல பூர்வ காரணங்கள் இருக்கின்றன. நெடுங்காலமாகவே ருஷ்யா தேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்ற கொடுங்கோன்மையாலும் அந்தங்களாலும் செல்வர்களின் குரூரத்தன்மையாலும் பல ராஜாங்கப்புரட்சிகள் நடந்து வந்திருக்கின்ற படியால் இந்த மாறுதல் அங்கு அமைப்பது சுலபமாயிற்று’ என்று குறிப்பிடுகிறார்.

1930ஆம் ஆண்டுகளில் சோவியத் பொருளாதாரம் அந்த நாட்டின் விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி, உள்நாட்டு வியாபாரம் ஆகியவை ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் ஸ்திரமடையத் தொடங்கியது. மறுபக்கம், ஜெர்மனி, இத்தாலி ஸ்பெயின் முதலிய நாடுகளில் தோன்றி வளர்ச்சி பெற்ற பாலிஸ்க் கொள்கைகள் சோவியத் எதிர்ப்பை கம்யூனிஸ்ட் எதிர்ப்பைக் கடுமையாகக்

216