பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கின.

மறுபக்கம் இந்த ஆண்டுகளில் மூன்றாவது கம்யூனிஸ்டு அகிலத்தின் கிளைகள், ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கநாடுகளில் பரவின. அவையெல்லாம் அவர்கள் நாடுகளில் சோவியத் ஆதரவுக் கொள்கையும், மார்க்சீய லெனினிய தத்துவங்களும் பரவுவதற்குத் துணையாக இருந்தன. மறுபக்கம் கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கொள்கைகளும் தொடர்ந்து கடுமையாகப் பிரசாரம் செய்யப் பட்டன. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் அமைப்புகள் மறைமுகமாகவே இருந்து கொண்டேதான்தங்கள் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவேண்டிய திருந்தது. கம்யூனிஸம் மார்க்சிலம் லெனினிஸம் பற்றி நூல்கள் இந்தியாவில் கிடைப்பது அரிதாக இருந்தது. பிரிட்டன் மூலமாகச் சில ஆங்கில மொழி நூல்கள் மறைமுகமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்திய மொழிகளில் மார்க்சீய நூல்கள் அநேகமாகக் கிடைப்பது அரிதாக இருந்தது.

ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளில் கடுமையான சோவியத் எதிர்ப்பு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கம் தோன்றி அது ஐரோப்பாவில் பரவியபோது 1936-37 ஆண்டுகளில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூலம் ஐரோப்பில் பாஸிஸ்டு எதிர்ப்பு இயக்கமும் உருவாகி வளர்ந்தது.

ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் ராஜிக் கட்சி என்று பெயரிலும் இத்தாலியில் முலோலின் தலைமையில் பாஸிஸ்ட் கட்சி என்னும் பெயரிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தன. அந்தக் கட்சிகளின் நோக்கம் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு உலக ஆதிக்கம். இந்த இருகட்சிகளை முதலில் ஐரோப்பிய வல்லரசுகள் சோவியத் எதிர்ப்பில் ஊக்க மூட்டின. பின்ன வளர்த்த கெடமார்பில் பாய்ந்ததைப் போல அந்த இரு நாடுகளும் ஜெர்மனியும் இத்தாலியும் ஜப்பானும் சேர்ந்து கொண்டு அச்சு நாடுகள் என்னும் பெயரில் 1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாவது உலகப் போரைப் பிரகடனம் செய்தது ஜெர்மனி பிரான்ஸ் பிரிட்டன் மீதும், இத்தாலி வடக்கு ஆப்பிரிக்கா நாடான எதியோப்பியா மீதும் ஜப்பான் கொரியா மீதும் பின்னர் அமெரிக்கா சீனாநாடுகள் போர் தொடுத்தன.

ஜெர்மன் நாஜி படைகள் வெகுவேகமாக முன்னேறி பிரான்ஸ் ஐரோப்பியநாடுகள் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டது.1940 ஜூன் மாதம் அச்சு நாடுகள் மூன்றும் சோவியத் யூனியன் மீது போர் தொடுத்தன. சோவியத் யூனியனின் மேற்கு எல்லையில் போர் தொடுத்த ஜெர்மனி விரைவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டு சோவியத் எல்லையில் புகுந்தது.

இரண்டாவது உலகப் பெரும்போர் மிக உக்கிரமாக நடைபெறலாயிற்று.

217