பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 குறள் பாட்டுகளுக்கும் விளக்கம் எழுதி இந்தக் கட்டுரை ஆசிரியர் ஆ.

சீனிவாசன் தனி நூல் வெளியிட்டுள்ளார். அந்த நூல் விரிவாகப்

பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறது.

பாப்பாப்பாட்டு

குழந்தைகளுக்காக என்று புதிய ஆத்திகூடி தொடங்கி பாப்பாப்பாட்டு

பாடுகிறார். பாப்பாப்பாட்டில் குழந்தைகளுக்கு சில நல்ல கருத்துக்களைப் பாலூட்டுகிறார். ஒடி விளையாடு பாப்பா என்று தொடங்கி,

‘வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில்

வாழும் குமரி முனை பாப்பா கிடக்கும் பெரிய கடல் கண்டாய். இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா,

வேதமுடைய திந்த நாடு நல்ல

வீரர் பிறந்த திந்த நாடு

சேதமில்லாத இந்துஸ்தானம்- இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்றும்,

‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி, உயர்ந்த மதி, கல்வி-அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.

முரசு என்னும் தலைப்பில்

‘வெற்றி எட்டுத்திக்கும் எட்டக்

கொட்டு முரசே என்று தொடங்கி

சாதிக் கொடுமைகள் வேண்டாம்

அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதரவுற்றிற்ங்கு வாழ்வோம். தொழில்

ஆயிரம்மாண் புரச் செய்வோம்’ என்றும்,

‘அன்பென்று கொட்டு முரசே

21