பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியப்பகுதி வியத் நாம் அரசின் அந்தஸ்து உயர்ந்தது. இப்போது இந்தியாவிற்கும் வியத் நாமிற்கும் இடையில் ராஜ தந்திர உறவு நல்லுறவு வர்த்த்க உறவு பொருளாதார உறவு பலப்பட்டுவருகிறது.

1980-ஆம் ஆண்டுகளிலிருந்து உலகில் புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. முதலாளித்துவப் பொருளாதார முறையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஜெர்மனி, ஜப்பான், கானடா ஆகிய ஏழு நாடுகள் உலகில் முதல் நிலையில் ஆதிக்கம் கொண்டு முதல் நிலையில் நின்று கொண்டிருக்கின்றன. இவைகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகத் தலைமையில் தனது ஆதிக்கத்தைக் கொண்டு செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அது முடியாமலும் தினருகிறது. மேலே குறிப்பிட்ட ஏழு நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் கனடாவும் சேர்ந்து ஒரு குழு, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஜெர்மனி ஒருகுழவாகவும், ஜப்பான் ஒரு தனி குழுவாகவும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயலுகிறார்கள். இவ்வாறு உலகிலுள்ள வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் மூன்று கோஷ்டிகளாகத்தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டும் உலகைச் சுற்றிக் கொண்டு நிற்கின்றன. அமெரிக்கா தனது தலைமை நிலைமையில் டாலர் நாணயத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலுகிறது. ஆனால், அதில் திணறுகிறது.

ஜெர்மனியும் ஜப்பானும், இரண்டாவது உலகப்போரில் தோல்வியடைந்து உலகத்தலைமை நிலையிலிருந்து அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட போதிலும் பொருளாதாரத் துறையில் முன்னுக்கு வந்து அமெரிக்க டாலரின் உலகத் தலைமை நிலைக்கு சவால் விட்டு தங்கள் ஜெர்மன் மார்க்கையும் ஜப்பானிய யென்னையும் உலக நாணயச் சந்தையில் மிதக்க விட்டிருக்கின்றன. -

ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜரெமன் ஆகிய நாடுகள் சேர்ந்து இதர நடுத்தர ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டு ஐரோப்பிய யூனியன் என்று அமைத்துக் கொண்டு, யூரோ என்னும் புதிய நாணயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. யூரோ நாணயம் உலக நாணயச் சந்தையில் டாலருக்கு ஒருவகைப் போட்டியாக உலவிக் கொண்டிருக்கிறது. ஜப்பான் இரண்டாம் உலகப் போர் தோல்வியால் ஏற்பட்டிருந்த அரசியல் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் நுகர்பொருள் சந்தையில் ஆசிய நாடுகளின் சந்தைபலத்தை வைத்துக் கொண்டு உலக மார்க்கட்டில் தனது ஆதிக்க பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு யென் நாணயத்தை மிதக்கவிட்டு அதன் உலக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறது.

இவ்வாறு உலகில் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் மூன்று மையங்களாக தங்களைத்தாங்களே சுழற்றிக் கொண்டும், மூன்று மையங்களுக்குள்

232