பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றையொன்று மோதிக்கொண்டும், உலகச் சந்தையில் சுதந்திர சந்தைப் பொருளாதாரம் என்னும் பெயரிலும், உலக மயமாக்கல் என்னும் பெயரில் உலகப் பொருளாதாரத்தில் தலையிட்டும் உலக வர்த்தக அமைப்பின் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த முயலுகின்றன. H

உல்க வர்த்தக சபையில் உலகின் எல்லாநாடுகளும் அங்கம் வகிக்கின்றன. உலக வர்த்தக சபை, என்பது அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கு ஒருவாக்கு என்னும் அடிப்படையில் அமைந்துள்ளது, ஐக்கிய நாட்டு சபையைப் போல பாதுகாப்பு சபை, ரத்து அதிகாரம் ஆகியவை கிடையாது. எனவே ஏழை நடுத்தர நாடுகள் தங்கள் பெம்பான்மை வாக்கு பலத்தை வைத்துக் கொண்டு தங்கள் பொருளாதார நிலையை நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அது ஒரு கடினமான நிலை - எனவே இந்தியா போன்ற நாடுகள் அரசியல் உறுதியுடன்துணிவான நிலை எடுத்து ஏழை நடுத்தர நாடுகளின் நலன்களுடக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டும். குறிப்பாக சிறு தொழில் மூலதன உதவி, தொழில்நுட்ப உதவி, விவசாய உற்பத்தி, விவசாய உற்பத்திப் பொருள்களின் விலைப் பாதுகாப்பு, வனப்பொருள் கடல் பொருள்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளில் சிலகஷ்டங்கள் இருந்த போதிலும் மிகவும் கடினமான சூழ்நிலை ஏழை நடுத்தர நாடுகளுக்கு ஆதரவாக நியாயத்தின் அடிப்படையில் நிற்க வேண்டும்.

உலகி நிலையில் சில எதிர்மறைப் போக்குகள் நிகழ்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் யூனியன் என்னும் முதலாவது தொழிலாளர் அரசியல் பொருளாதார அமைப்பு என்பது மறைந்து போனது. உலைந்துவிட்டது. அதிலிருந்து அதில் அங்கம் வகித்த பதினாறு குடியரசுகளும் தனித்தனியான சுதந்திர நாடுகளாக ஆகிவிட்டன. அதில் ரஷ்யக்குடியரசு உலக அரசியல் பொருளாதார நிலைபாட்டில் தனியான வல்லரசாக வெளிப்பட்டிருக்கிறது. சோஷலிஸ் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சந்தை எல்லாம் மறைந்து விட்டது. கலைந்து விட்டது. உலைந்து விட்டது. பழைய தொடர்புகளோடு அவைகள் சுதந்திர நாடுகளாக உலக நாடுகளுடன் உறவு வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. உலக அமைப்புகள் அனைத்திலும் அங்கம் வகித்துக் கொண்டு தொடர்பு வைத்துக் கொண்டும் சுயேச்சையாக சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டுவருகின்றன.

இனி உலகில் இரண்டு சந்தைகள் இல்லை. ஒரே சந்தைதான் ஒரே சந்தைப் பொருளாதாரம் தான். அதில் போட்டி இருக்கும். ஆயினும் ஒரு நாடோ

மற்றதோ ஆதிக்கம் செலுத்தவது மிகவும் கடினம். இந்த சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளும் தங்கள் நலன்கள் அடிப்படையில் பல கூட்டுகள்

233