பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்துக் கொண்டிருக்கின்றன. பழைய முறையில் ஆதிக்கம் கொள்வது, ஆதிக்கம் செலுத்துவது மையம் கொள்வது சாத்தியமில்லை. உலகில் தொழிலாளி வர்க்கப் பொருளாதாரம் என்பது மறைந்து விட்டது ஒரே மக்கள் பொருளாதாரம் தான் பல உலக மய்யங்கள் இந்தப் பொருளாதாரத்தில் செயல்படுகின்றன.

இன்றுள்ள உலக வர்தக சபையில் வளர்ச்சியடைந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்க தனது மேலாதிக்கத்தைச் செலுத்த முயலுகிறது. அத்துடன் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஜப்பானும் கடுமையாகப் போட்டியிருகிறது.

இன்றைய உலகச் சந்தையில் சாதாரண மக்கள் முதல் அனைத்து மக்களுக்கும் அன்றாடம் பயன்படக்கூடிய நுகர்பொருள்கள் சந்தையில் வந்து குவிகின்றன. நுகர் பொருள் சந்தையில் போட்டி வலுவாக உள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஆயுத தளவாட உற்பத்தி தான் மேலோங்கி நிற்கிறது. உலக நாடுகளின் ஆயுத தளவாடதேவைகள் குறைந்து வருகின்றன. அதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தமும் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மனி ஜப்பான் போட்டிகளை சமாளிப்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குக் கடினமாக இருக்கிறது. முன்னாள் சோவியத் நாடுகள் தங்களுக்கு தாங்கள் உதவிசெய்யும் நாடுகளுக்கும் எந்திரத் தொழில்களில் தான் அதிக கவனம் செலுத்தி வந்திருந்தன. நுகர்பொருள் கலாச்சாரம் உலகில் மேலோங்கி வந்த போது தான் சோவியத் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு, சோவியத் அமைப்பு சிதைந்தது.

இப்போது பழைய சோவிய நாட்டு மக்களுக்கு நுகர் பொருள் தேவைகளும் அதிகரித்துள்ளன. நுகர் பொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளான ஜெர்மனி ஜப்பான் முதலிய நாடுகள் சந்தைப் போட்டியில் முன்னணியில் உள்ளன. முன்னாள் சோவியத் நாடுகள் நூகர்பொருள் உற்பத்தியில் இப்போது அடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளன தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு தங்கள் நாடுகளின் நுகர்பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளும் வரை அவை இதர ஐரோப்பிய நாடுகளையும் ஜப்பானையும் தான் எதிர்பார்க்கவேண்டிய திருக்கிறது. இருப்பினும் உலகச் சந்தை விஷயத்தில் ரஷ்ய காமன் வெல்தி நாடுகள் (முன்னாள் சோவியத்) தெளிவாகவே உள்ளன.

சீனாவின் பொருளாதார நிலையும் பிரச்சினைகளும் தனித்தன்மைகள் கொண்டதாகவே இருக்கிறது. சீனா மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட ஒரு பெரிய நாடு. அதனுடைய உணவு, உடை, வீட்டு வசதிகள், இதர அடிப்படை தேவைப் பொருள்கள் எல்லாவற்றிலுமே அதிகமான தேவை உள்ளது. பழைய முப்பாய்ச்சல், கிராமக் கம்யூன் அமைப்பு, கலாச்சாரப் புரட்சி

234