பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுப்பிக் கொண்டிருந்த காலம்.

அன்னிய ஆட்சியின் காரணமாக நமது தொழில்கள் எல்லாம் ஆதரவின்றி நசித்துக் கொண்டிருந்த நேரம் எப்படியும் நமது உள்நாட்டுத் தொழில் களைப் பாதுகாக்க வேண்டும் என்று அன்னிய வஸ்து வர்ஜனம், ஜாதியக் கல்வி, பஞ்சாயத்து சரீரப் பயிற்சி என்றும் சுதேசீயத்தைத் தாங்கும் நான்கு தூண்களாக வகுத்துக் கொண்டு சூதந்திரப் போராட்டத்தோடு சேர்ந்து இணைந்து சுதேசியத்தையும் வளர்ந்தோம்.

இப்போது நாம் சுதந்திரத்தைப் பெற்று விட்டும். ஆயினும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க வேண்டிய பெரிய கடமை நம்முன் நிற்கிறது. நமது சுதந்திரத்தைப் பேணிக்காக் வேண்டுமானால் நமது பொருளாதாரபலம் பெருக வேண்டும். நமது தொழில் துறையும் விவசாயத்துறையும், உள் நாட்டு வெளிநாட்டு வாணிபமும் பலப் பட வேண்டும். --

நாம் பொருளாதாரத்துறையில் நோஞ்சானாக இருந்தால், விவசாயத் துறையில் பலவீனமாக இருந்தால் வாணிபத்தில் மாளியாக இருந்தால் கண்ட நாய்க்களெல்லாம் நம்மீது பாயும் .

நமது மக்கள், நமது தொழிலாளர்கள், நமது தொழில் நுட்ப நிபுணர்கள் நமது தொழில் நிர்வாகிகள், நமது வாணிபர்கள், நமது சாகுபடியாளர்கள் நமது கிராம்ப்புறமக்கள் லேசானவர்களல்ல இளைத்தவர்களல்ல, நமது நாடும் வளம் மிக்க நாடு.

எனவே நாம் நமது நாட்டை பொருளாதாரத்துறையில் தொழில்துறையில், தொழில் நுட்பத் துறையில், வாணிபத்துறையில் விவசாயத்துறையில் உற்பத்தித் துறையில் பொருளுற்பத்தித் துறையில் வலுவுள்ள நாடாக வளரவேண்டும். இப்போது சலப் பலதுறைகளில் முன்னேறி வருகிறோம். உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் வன்றாக வேகமாக முன்னணிக் குவிந்து கொண்டிருக்கிறோம்.

ஆயினும் உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், சுதந்திர சந்தை, உலக வர்த்தக சபை, உலக வங்கி, சர்வதேச நீதி நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, ஆகியவைகளில், சலவலுவான நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வலுவாக முயற்சிகள் செய்து கொண்டுள்ள நேரத்தில் நமக்கு வாணிபத்துறையில், நாணய மாற்றுத்துறையில் உலகச்சந்தையில் கடுமையானபோட்டியிருக்கும். நமது உள்நாட்டுச் சந்தையிலும் எந்த ஒரு வலுவான நாடும் உள்ளே புகுந்து ஆதிக்கம் செலுத்த முயலும்.

இந்த சூழ்நிலையில் நாம் மிகுந்த கவனத்துடனும், கழுகப் பார்வையுடனும், விழிப்புடனும், சிறந்த வியாபார நோக்குடனும் இருக்க வேண்டும். முதலாவதாக நமது உற்பத்திப் பொருள்கள் தரமானதாக, உயர்வானதாக இருக்க வேண்டும். -

241