பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் ஐந்து குழுக்கள் உண்டு. 1. குடிகள் குழு 2.குருக்கள் குழு 3 ஜோதிடர் குழு 4 வைத்தியர் குழு 5. மந்திரிகள் குழு

ராஜா செய்யும் விதிகள் இந்த ஐந்து குழுக்களின் அனுமதி பெற்ற பிறகு தான் உறுதிப்படும். குடிகளின் குழுவிலே ஜனங்களின் பிரதி நிதிகள் இருந்தனர். கருக்கள் சபையிலே மதத்தலைவரும் ஜோதிடர் சபையிலே கணிதக்காரரும் இருந்து அரசியலானது சாஸ்திரக் கருத்தையும் ஜனாச் சாரங்களையும் தழுவி நடக்கும் படி ஆலோசனை சொல்லினர் வைத்தியக் குழு நாட்டிலே நோய்கள் பிரவாத படி அரசன் செய்ய வேண்டிய சுத்தி முறைகளை கவனிப்பது. மந்திரிகளின் குழு அரசியலின் மூல தர்மங்களிலே தவறு நேரிடாமல் ஆரசனை நியாய வழியில் நடத்துவது. இந்த விஷயமெல்லாம் நமது நாட்டுப் பழைய சாஸனங்களை ஆராய்ச்சி செய்யும் புராதன பரிசோதனை பண்டிதர்கள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். மணிமேகலை முதலிய பழைய நூல்களிலும் காணலாம். (ஐம்பெரும் குழுக்களும் எண் போராயமும் என்று நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆர்.) இது நிற்க ஜனங்களுடைய ஸ்ம்மதப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் ஏற்படும் சபைகள் இங்கிலாந்து முதலிய தேசங்களில் நாளுக்கு நாள் நாகரிகமும் சீர்திருத்தமும் பெற்று மேன்மேலும் அதிக வலிமையுடன் ஏறி வந்திருப்பதாகச் சரித்திரங்களிலே தெரிகிறது. நமது நாட்டில் இவை விருத்தியடைய வில்லை ஏன்? எதனால்’ என்று மகாகவி கேட்கிறார்.

பாரதநாட்டின் அரசியல் நிர்வாகம் என்பது நமது பண்டைய ஞானிகள் வகுத்த தர்மம் அர்த்தம் காமம் என்னும் புருஷார்த்தங்களில் வகுத்தக் கூறியுள்ள நெறிமுறைகளின் படி அதற்குரிய அறிஞர் வகுத்த வழிமுறைகளின் நடைபெற்றது. ஆனால், பின்னர்படையெடுப்பாளர்களும் அதன் பின்னர் வந்த ஆக்கிரமிப்பாளர்களும் அந்த முந்தைய வழிமுறைகளை அழித்தார்கள் பழைய நெறி முறைகளையும் வழி முறைகளையும் வகுத்த ஞானிகளை பைத்தியக் காரர் என்றும் பிச்சைக் காரர் என்று ஏசினார்கள். புதிய கொள்ளை முறைகளையும் மக்களை அடிமைப்படுத்திக் கொள்ளையடிக்கும். சட்டதிட்டங்களையும் நிலை நாட்டமுயன்றதால் பழைய நெறிமுறைகளும் வழிமுறைகளும் சிதைந்து போயின. o

இப்போது நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பழைய வழிமுறைகளையும் நெறிமுறைகளையும், புதிய சூழ்நிலைகளுக்கேற்ப, புதிய சமுதாய வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, அன்னிய ஆங்கிலேயர் வகுத்த சட்டதிட்டங்களையும் அடிப்படைக் கல்வி முறைகளையும் ஆற்றியமைத்து அரசியல் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். அப்போது மகாகவி பாரதியின் சுதந்திரக் கனவு நிறைவேறும். நகரம் என்னும் தலைப்பில் மகாகவி எழுதுகிறார்?

வால்ட் விட்மன் என்பவர் சமீபகாலத்தில் வாழ்ந்த அமெரிக்க

243