பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரோகம் அநியாயம், கொள்ளை கர்வம் ஹிம்சை அவமதிப்பு கொலை முதலிய தீமைகள் செய்யாமல் பரஸ்பரம் அன்புடனும் மதிப்புடனும் நடந்து எல்லாரும் விடுதலை யும் ஸ்மத்வமும் உள்ளதாகிய நகரம் கண்முன்னே தோன்றுவதை விரும்பாத மனிதனும் உண்டோ’ என்று மாகாகவி வால்ட்லிட்மன் எழுதியுள்ளதை எடுத்துக் காட்டி தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.

பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட பல கலவரஞங்ஙடகது.ாள் போர்கள், மக்கள் பட்ட துன்பதுயரங்கள் ஆகியவைகளைக் கண்டும் கேட்டும் சந்தித்த பல அறிஞர்களும், துன்பதுயரங்களும் போரும் இல்லாத ஒரு சமத்வமான சமாதானமான சமுதாயம் ஏற்பட வேண்டும் என்று சிந்தித்தார்கள். அப்படிப்பட்ட சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறந்து வளர்ந்த ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மன். அவர் நமது தமிழ் நாட்டின் தலை சிறந்த கவிஞர் பாரதியின் உள்ளத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. மகாகவி பாரதியின் உணர்வை வெளிப்படுத்தகிறது. இந்தக் கட்டுரையும் குறிப்பும்

அனந்தசக்தி: இந்த்த் தலைப்பில் மகாகவி எழுதுகிறார்.

எறும்பு இறந்து போன புழுவை இழுத்துச் செல்லுகிறது. உதனால்? சக்தியினால் தூமகேது அநேக லட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக் கொண்டு திலை வெளியில் மஹா வேகத்தோடு சுழலுகின்றது எதனால் சக்தி யினால். அந்தத்துமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒருமண்டலமாகத் தன்னைச் சுற்றிவரும்படி சூரிய கோளம் நியமிக்கிறது எதனால்? சக்தியினால்,

ஒரு கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன் ஐரோப்பியாக் கண்டம் முழுவதையும் வெல்லுகிறான். இவை இரண்டிற்கும் சக்தியே ஆதாரம் கண்ணுக்குப் புலப்புடுவதும், ஊக்கத்திற்குப் புலப்படுவது மாகி வெளியுலகங்கூட எல்லையற்றதென்று படுவதுமாகிய வெளியுலகம் கூட எல்லையற்ற தொன்று பண்டிதர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும் சக்தி தானும், எல்லையற்றதாகும். இந்த அநந்தமானது. அதனினும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால் பலவிதப் பயன்களுண்டு ‘யத்பாவயஸி தத்வவளி’ எதனைபாவிக்கிறாயோ நீ அதுவாக ஆகின்றாய்.

ஆனால், இங்ஙனம் பாவனை செய்வது யோசானகாரியமென்று நினைத்து விடலாகாது. உயிர் தழும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பவானை செய்ய வேண்டும். பொறி பறக்கும் பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும். இதனை விண்கதை யென்று நினைத்துவிட வேண்டாம். விடாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன்பயன் தெரியும்.

245