பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகரைத் தமிழ் உணர்வில் தட்டியெழுப்ப, பரிதிமால் கலைஞர் (என்றும் சூரிய நாராயணசாஸ்திரி) பாடிய பாடல்: ஆலவாயின் அவிர்சடைக் கடவுளை ஏலவாதித்த இன்றமிழ்க்கீரன் வந்தவதரித்த மதுர்ையும் நீ கொலோ’ என பாடி மதுரையைத் தட்டி எழுப்பினார். மதுரை தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் கல்லூரி அமைந்தது. அந்தக் கல்லூரியின் தலைவராக பாண்டித்துரைத் தேவரும் முதல்வராக தமிழ் பேரறிஞர் திரு நாராயணய்யங்காரும் சிறப்பணியாற்றினர். அப்போது திரு நாராயணய்யங்காரை ஆசிரியராக கொண்ட ‘செந்தமிழ் என்னும் பத்திரிகை நடத்தப்பட்டது. அந்த இதழில் தமிழ் பற்றி சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்து புகழ் பெற்று தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப்படிப்பிற்கும் உதவின. துணையாக இருந்தன. அந்த செந்தமிழ் இதழையே மகாகவி பாரதி இங்கு குறிப்பிடுகிறார்.

+++

250