பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவிலே தெளிவு

நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவையருளாய்

குறி குணமேதும் இல்லதாய் அனைத்தாயக் குலவிடு தனிப்பரம் பொருளே

என்று முடிக்கிறார்.

இப்பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லும் ஆய்வுக்குரியன.

1.

பாரதி அறுபத்தாறு என்னும் தலைப்பிலான பாடலில்,

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்

என்று தொடங்கித்தன்னை சித்தன் என்று வரித்துக் கொள்கிறார்.

புதுச்சேரியில் மகாகவி பாரதியார் இருந்த காலத்தில் பாடிய இந்தப் பாடல் கருத்துச் செரிவு மிக்கது. அந்த வாழ்க்கை அனுபவங்களைப் பிரதி பலிப்பதுமாகும்.

இப்பாடலில் பெண்ணின் பெருமை பற்றியும் பேசுகிறார்.

பெண் விடுதலை - தாய் மாண்பு பற்றிப் பாடுகிறார்.

‘பெண்ணுக்கு விடுதலை என்றி

ங்கோர் நீதி

பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி

கேளிர்” என்றும்,

தாய்க்கு மேல் இங்கேயோர் தெய்வ

26