பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முண்டோ? என்றும்

பெண் விடுதலையைப் பற்றிப் பேசும் பாரதி ஐரோப்பாவில் உள்ள விடுதலைக்காதல் முறையை ஏற்கவில்லை. அதை

வீரமிலா மனிதர் சொல்லும் வார்த்தை

கண்டிர

விடுதலையாம் காதலெனிற் பொய்மைக்

காதல் என்றும்

கற்பு என்பது இருபாலருக்கும் பொது வானது

என்றும் பாரதி கூறுகிறார்.

முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு,

2. பாஞ்சாலி சபதம்,

3. குயில் பாட்டு

ஆகியவை அற்புதமான பாடல்களாகும். அவைகளுக்கு ஈடு இணையேயில்லை. அவை யெல்லாம் தனியான ஆய்வுக்கும் செயல்பாட்டுக்கும் சரியன.

கண்ணன் பாட்டுத் தொகுப்பில்

‘'கண்ணன் என் தோழன்

கண்ணன் என் தாய்

கண்ணன் என் தந்தை

கண்ணன் என் சேவகன்

கண்ணன் என் அரசன்

கண்ணன் என் சீடன்

கண்ணன் என் சத்குரு’ என்னும் தலைப்புகளில் பாடுகிறார். இன்னும்,

கண்ணம்மா என் குழந்தை

27