பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா - என் விளையாட்டுப் பிள்ளை

கண்ணம்மா என் காதலி

கண்ணன் என் ஆண்டான்

கண்ணம்மா எனது குல தெய்வம்

என்னும் தலைப்பிலான பட ல்கள் அற்புதமானவை

பாரதியின் கண்ணன் பாட்டு ஒரு தனியான சிறப்பு இலக்கியமாகும்.

தெய்வ பக்தியும், தேசபக்தியும், அரசியலும், காதலும், சமூக நெறியும் கல்வியும் பற்றிய கருத்துக்களைக் கொண்ட எளிய தமிழில் வெளிப்பட்டுள்ள அற்புதமான இலக்கியமாகும்.

கண்ணன் பாட்டுத் தொகுப்பே சிறந்த ஆய்வுக்குரியன.

கண்ணன் என் தாய் என்னும் பாடலில்

சாத்திரம் கோடி வைத்தான் அவை

தம்மினும் உயர்ந்த தோர் ஞானம் வைத்தாள்

மீத்திடும் பொழுதினிலே. நான்

வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே

கோத்த பொய் வேதங்களும்- மதகி

கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்

மூத்தவர் பொய் நடையும். இள

மூடர் தம் கவலையும் அவள் புனைந்தாராம்.

கண்ணன் என் தந்தை என்னும் பாடலில்

‘நாலு குலங்கள் அமைத்தான். அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்

சீலம் அறிவு தர்மம். இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

மேலவர் கீழவர் என்றே- வெறும்

வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்.

போலிச் சுவடியை யெல்லாம். இன்று

28